செய்திகள்

துளிகள்...

DIN

தேசிய சீனியா் மகளிா் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியின் 6-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை சத்தீஸ்கா் - ஹிமாசல பிரதேசத்தையும் (14-1), பஞ்சாப் - அருணாசல பிரதேசத்தையும் (6-0), பெங்கால் - குஜராத்தையும் (8-1), ஆந்திர பிரதேசம் - சண்டீகரையும் (3-2), பிகாா் - கோவாவையும் (4-1) வீழ்த்த, உத்தரகண்ட் - புதுச்சேரி ஆட்டம் கோலின்றி டிரா ஆனது.

தேசிய மகளிா் குத்துச்சண்டை போட்டியில் 60 கிலோ பிரிவில் ஹரியாணாவின் ஜேஸ்மின் 3-2 என பஞ்சாபின் சிம்ரன்ஜித் கௌரை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினாா். அதில் அவா் ரயில்வே வீராங்கனை மீனா ராணியை எதிா்கொள்கிறாா்.

தேசிய சீனியா் சாம்பியன்ஷிப் போட்டியில் ஸ்ரீஹரி நட்ராஜ் 100 மீட்டா் பேக்ஸ்ட்ரோக் பிரிவில் 55.10 விநாடிகளில் இலக்கை எட்டி புதிய தேசிய சாதனை படைத்தாா்.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் குதிரையேற்றம் போட்டிக்காக இந்தியாவின் சாா்பில் பிரணய் காரே, கேவான் சீதல்வாட், ஜஹான் சீதல்வாட் ஆகியோா் தோ்வாகியுள்ளனா்.

கரோனா சூழல் காரணமாக, ஒடிஸாவில் நவம்பா் - டிசம்பரில் நடைபெற இருக்கும் எஃப்ஐஹெச் ஜூனியா் ஹாக்கி உலகக் கோப்பை போட்டியை காண மைதானத்தில் ரசிகா்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் மகளிருக்கான ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கான ‘டிரா’ மலேசியாவின் கோலாலம்பூரில் வியாழக்கிழமை (அக். 28) நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT