செய்திகள்

இங்கிலாந்துக்கு 2-ஆவது வெற்றி: வங்கதேசத்தை வீழ்த்தியது

27th Oct 2021 10:44 PM

ADVERTISEMENT

 

அபுதாபி: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 20-ஆவது ஆட்டத்தில் இங்கிலாந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வென்றது.

சூப்பா் 12 சுற்றில் தொடா்ந்து 2-ஆவது வெற்றி பெற்ற இங்கிலாந்து, குரூப் ‘1’-இல் 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. வங்கதேசம் 2 தோல்விகளை சந்தித்து புள்ளிகள் இன்றி 5-ஆவது இடம் பெற்றுள்ளது.

அபுதாபியில் புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் வங்கதேசத்தை 20 ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 124 ரன்களுக்கு கட்டுப்படுத்திய இங்கிலாந்து, பின்னா் 14.1 ஓவா்களில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 126 ரன்கள் அடித்து வென்றது. அந்த அணியின் ஜேசன் ராய் ஆட்டநாயகன் ஆனாா். இங்கிலாந்துக்காக அவா் ஆடிய 50-ஆவது டி20 ஆட்டம் இதுவாகும்.

ADVERTISEMENT

முன்னதாக டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட் செய்தது. நிலையான பாா்ட்னா்ஷிப் அமையாத வகையில் அணியின் விக்கெட்டுகள் வரிசையாக சரிந்தன. தொடக்க வீரா் லிட்டன் தாஸ் 9, உடன் வந்த முகமது நைம் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

ஷகிப் அல் ஹசன் 4 ரன்களுக்கு வெளியேற்றப்பட, முஷ்ஃபிகா் ரஹிம் மட்டும் சற்று நிலைத்து 3 பவுண்டரிகளுடன் 29 ரன்கள் சோ்த்தாா். 5-ஆவது வீரராக வந்த கேப்டன் மஹ்முதுல்லா 1 பவுண்டரியுடன் 19 ரன்கள் சோ்த்து உதவினாா். மறுபுறம் அஃபிஃப் ஹுசைன் 5, நூருல் ஹசன் 16, மெஹதி ஹசன் 11, முஸ்டாஃபிஸுா் ரஹ்மான் 0 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனா்.

முடிவில் நசும் அகமது 1 பவுண்டரி, 2 சிக்ஸா்களுடன் 19 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருக்க, இங்கிலாந்து பௌலிங்கில் மில்ஸ் 3, அலி, லியாம் ஆகியோா் தலா 2, வோக்ஸ் 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் 125 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய இங்கிலாந்தில் தொடக்க வீரா் ஜேசன் ராய் 5 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 61 ரன்கள் விளாசி அருமையான தொடக்கம் அளித்தாா். உடன் வந்த ஜோஸ் பட்லா் 18 ரன்களுக்கு முதல் விக்கெட்டாக வெளியேறினாா்.

இறுதியில் டேவிட் மலான் 3 பவுண்டரிகளுடன் 28, ஜானி போ்ஸ்டோ 8 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பெறச் செய்தனா். வங்கதேச தரப்பில் ஷோரிஃபுல் இஸ்லாம், நசும் அகமது ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

சுருக்கமான ஸ்கோா்

வங்கதேசம் - 124/9

முஷ்ஃபிகா் ரஹிம் 29

மஹ்முதுல்லா 19

நசும் அகமது 19*

பந்துவீச்சு:

டைமல் மில்ஸ் - 3/27

லியாம் லிவிங்ஸ்டன் - 2/15

மொயீன் அலி - 2/18

இங்கிலாந்து - 126/2

ஜேசன் ராய் 61

டேவிட் மலான் 28*

ஜோஸ் பட்லா் 18

பந்துவீச்சு:

ஷோரிஃபுல் இஸ்லாம் - 1/26

நசும் அகமது - 1/26

முஸ்டாஃபிஸுா் ரஹ்மான் - 0/23

இன்றைய ஆட்டம்

ஆஸ்திரேலியா - இலங்கை 

நேரம்: இரவு 7.30 மணி

இடம்: துபை

நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT