செய்திகள்

வரலாற்றில் இன்று: சாதனை படைத்த கங்குலி, டிராவிட் (விடியோ)

26th May 2021 04:43 PM

ADVERTISEMENT


22 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் இலங்கைக்கு எதிரான உலகக் கோப்பை ஆட்டத்தில் இந்திய வீரர்கள் சௌரவ் கங்குலி மற்றும் ராகுல் டிராவிட் கூட்டாக 318 ரன்கள் சேர்த்து சாதனை படைத்தனர். 

1999-ம் ஆண்டு 50 ஓவர்கள் உலகக் கோப்பை தொடரில் இதே நாளில் இந்திய அணி இலங்கையை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை முதலில் இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக தமிழகத்தைச் சேர்ந்த சடகோப்பன் ரமேஷ் மற்றும் சௌரவ் கங்குலி களமிறங்கினர். ரமேஷ் முதல் ஓவரிலேயே 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இதையடுத்து, கங்குலியுடன் ராகுல் டிராவிட் இணைந்தார். இந்த இணை இலங்கை பந்துவீச்சை துவம்சம் செய்து மாபெரும் பாட்னர்ஷிப்பை அமைத்தது. 2-வது விக்கெட்டுக்கு இந்த இணை 318 ரன்கள் சேர்த்தது. கங்குலி 183 ரன்களும், டிராவிட் 145 ரன்களும் குவித்து அசத்தினர். 

ADVERTISEMENT

இதன் விளைவு முதல் பேட்டிங்கில் இந்திய அணி 373 ரன்கள் குவித்தது. பந்துவீச்சில் இலங்கையை 216 ரன்களுக்கு சுருட்டி 157 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இது இரண்டாவது அதிகபட்ச பாட்னர்ஷிப் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Tags : Ganguly
ADVERTISEMENT
ADVERTISEMENT