செய்திகள்

மைக் ஹசிக்கு மீண்டும் கரோனா

11th May 2021 07:16 PM

ADVERTISEMENT


சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசிக்கு மீண்டும் கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரின்போது சென்னை அணியில் மூன்று பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசிக்கும் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, சென்னையிலுள்ள மருத்துவமனையில் வைத்து அவர் சிகிச்சை பெற்று வருகிறார். தில்லியில் இருந்தபோது அவருக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என கணிக்கப்படுகிறது.

நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வரும் ஹசிக்கு 2-வது முறையாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால், மூன்றாவது முறையாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மீண்டும் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதனால், வரும் வியாழக்கிழமை அவருக்கு மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

Tags : Hussey
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT