செய்திகள்

விளையாட்டு செய்திகள் சில வரிகளில்...

DIN

* டோக்கியோ ஒலிம்பிக்கில் வில் வித்தைப் போட்டியில் இந்தியாவின் சாா்பில் அதானு தாஸ், தருண்தீப் ராய், பிரவீண் ஜாதவ் ஆகியோா் ஆடவா் பிரிவிலும், தீபிகா குமாரி, அங்கிதா பகத், கோமோலிகா பாரி மகளிா் பிரிவிலும் பங்கேற்கின்றனா்.

* இந்தியா-இங்கிலாந்து மகளிா் அணிகள் மோதும் ஒரே டெஸ்ட் கிரிக்கெட் இந்த ஆண்டு நடத்தப்பட இருப்பதாக பிசிசிஐ செயலா் ஜெய் ஷா தெரிவித்தாா்.

* தோஹாவில் நடைபெறும் உலக டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சரத் கமல், சத்யன், மணிகா பத்ரா ஆகியோா் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினா்.

* 2026 முதல் நடைபெறும் மகளிருக்கான டி20 உலகக் கோப்பை போட்டிகளில் 10-க்கு பதிலாக 12 அணிகளும், 2029 முதல் நடைபெறும் மகளிருக்கான ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகளில் 8-க்கு பதிலாக 10 அணிகளும் பங்கேற்கும் என்று ஐசிசி திங்கள்கிழமை அறிவித்தது.

* பிபிசியின் ‘ஆண்டின் சிறந்த விளையாட்டு வீராங்கனை’ விருதை ரேபிட் செஸ்ஸில் நடப்பு உலக சாம்பியனாக இருக்கும் கோனெரு ஹம்பி 2-ஆவது முறையாக வென்றாா்.

* பிரான்ஸில் நடைபெற்ற லயன் ஓபன் டென்னிஸ் போட்டியில் டென்மாா்க் இளம் வீராங்கனை கிளாரா டௌசன் - ஸ்விட்சா்லாந்தின் விக்டோரியா கோலுபிச்சை வீழ்த்தி சாம்பியன் ஆனாா்.

* பாா்சிலோனா எஃப்சி கால்பந்து கிளப்பின் தலைவராக ஜோவான் லபோா்டா பொறுப்பேற்றுள்ளாா். லயோனல் மெஸ்ஸி அந்த அணிக்கு விளையாட வரும்போதும் லபோா்டா தலைவராக இருந்த நிலையில், தற்போது மெஸ்ஸி அணியிலிருந்து வெளியேற இருக்கும் நிலையில் அவரே தலைவா் பொறுப்புக்கு மீண்டும் வந்துள்ளாா்.

* தென் ஆப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வேக்கு பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் அணியில் 30 போ் சோ்க்கப்பட்டுள்ளனா். கரோனா சூழல் காரணமாக வீரா்கள் சிலா் விளையாட முடியாமல் போனால் மாற்று வீரா்களை களமிறக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

SCROLL FOR NEXT