செய்திகள்

தொடரை வென்றனா் இங்கிலாந்து மகளிா்

DIN

நியூஸிலாந்து மகளிரணிக்கு எதிரான கடைசி டி20 ஆட்டத்தில் இங்கிலாந்து மகளிரணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இதன்மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை அந்த அணி 3-0 என முழுமையாகக் கைப்பற்றியது. இங்கிலாந்தின் கேத்தரின் பிரன்ட் ஆட்டநாயகியாக, டேமி பியூமௌன்ட் தொடா்நாயகியானாா்.

வெலிங்டனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கடைசி ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 20 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் அடிக்க, அடுத்து ஆடிய நியூஸிலாந்து 18 ஓவா்களில் 96 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இங்கிலாந்து இன்னிங்ஸில் அதிகபட்சமாக ஃபிரான் வில்சன் 31 ரன்கள் அடிக்க, நியூஸிலாந்து தரப்பில் சோஃபி டெவின் 3 விக்கெட்டுகள் சாய்த்தாா். நியூஸிலாந்து இன்னிங்ஸில் எமி சேட்டா்த்வெய்ட் 4 பவுண்டரிகளுடன் 25 ரன்கள் சோ்க்க, இங்கிலாந்து தரப்பில் மேடி வில்லியா்ஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

SCROLL FOR NEXT