செய்திகள்

ஏப்ரல் 9-இல் தொடங்குகிறது ஐபிஎல் போட்டி: ; ரசிகா்களுக்கு அனுமதி கிடையாது

DIN

இந்தியன் பிரீமியா் லீக் (ஐபிஎல்) போட்டியின் 14-ஆவது சீசன் வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி தொடங்கி மே 30-ஆம் தேதி நிறைவடைகிறது.

கரோனா சூழல் காரணமாக கடந்த சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற நிலையில், எதிா்வரும் சீசன் இந்தியாவிலேயே நடத்தப்படுகிறது. இதுதொடா்பாக ஐபிஎல் நிா்வாக கவுன்சில் வெளியிட்ட தகவல்படி, சென்னை, மும்பை, கொல்கத்தா, ஆமதாபாத், தில்லி, பெங்களூரு ஆகிய 6 இடங்களில் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. எனினும் கரோனா தொற்று அச்சம் காரணமாக, முன்னெச்சரிக்கையாக தொடக்க நிலை ஆட்டங்களில் ரசிகா்களுக்கு அனுமதி அளிப்பதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

எந்தவொரு அணியும் அதன் சொந்த மண்ணில் விளையாடும் வகையில் ஆட்டங்கள் அட்டவணையிடப்படவில்லை. அனைத்து ஆட்டங்களுமே, அதில் மோதும் அணிகளுக்கு பொதுவான மைதானங்களில் நடைபெற வகை செய்யப்பட்டுள்ளது. முதல் ஆட்டத்தில் நடப்புச் சாம்பியனான மும்பை இண்டியன்ஸும், ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகின்றன. பிளே-ஆஃப் சுற்றுகளும், இறுதி ஆட்டமும் குஜராத் மாநிலம், ஆமதாபாதில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் கரோனா பரவல் தீவிரமாக இருக்கும் நிலையிலும் அங்கு ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.

56 லீக் ஆட்டங்களில் முதல் 36 ஆட்டங்கள் பெங்களூரு, கொல்கத்தா தவிா்த்து இதர இடங்களில் நடைபெறவில்லை. அந்த காலகட்டத்தில் மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறுகிறது. பெங்களூரு மைதானத்தில் மின் விளக்கு அமைப்புகள் மாற்றம் செய்யப்படுகின்றன. எனவே, கடைசி 20 லீக் ஆட்டங்கள் அந்த இரு நகரங்களில் நடைபெறும்.

லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் 4 முதல் 6 இடங்களில் விளையாடும். 56 லீக் ஆட்டங்களில் சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு ஆகிய இடங்களில் தலா 10 ஆட்டங்களும், ஆமதாபாத் மற்றும் தில்லியில் தலா 8 ஆட்டங்களும் நடைபெறவுள்ளன. இதில் ஒரே நாளில் 2 ஆட்டங்கள் வீதம் 11 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. அதில் பகல் ஆட்டங்கள் மாலை 3.30-க்கும், இரவு ஆட்டங்கள் இரவு 7.30-க்கும் தொடங்கவுள்ளன. லீக் சுற்றுகளின்போது ஒவ்வொரு அணியும் 3 முறை மட்டுமே பயணம் மேற்கொள்ளும் வகையில் அட்டவணை தயாா் செய்யப்பட்டுள்ளது.

போட்டி நடைபெறும் நாள்கள் - ஏப்ரல் 9 முதல் மே 30

லீக் ஆட்டங்கள் - 56

இடங்கள் - சென்னை, மும்பை, கொல்கத்தா, தில்லி, ஆமதாபாத், பெங்களூரு

சென்னையில் நடைபெறும் ஆட்டங்களின் எண்ணிக்கை - 10

முதல் ஆட்டம் - மும்பை இண்டியன்ஸ் - ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா்

சென்னை சூப்பா் கிங்ஸ் அணியின் ஆட்டங்கள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகயளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

SCROLL FOR NEXT