செய்திகள்

2-வது டி20: மேற்கிந்தியத் தீவுகள் அணியை வீழ்த்திய இலங்கை (விடியோ)

6th Mar 2021 10:46 AM

ADVERTISEMENT

 

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டி20 ஆட்டத்தை இலங்கை அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

கூலிட்ஜில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் விளையாடிய இலங்கை அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர் குணதிலகா 56 ரன்கள் எடுத்தார். 

இதன்பிறகு இலங்கை சுழற்பந்துவீச்சாளர்கள் அபாரமாகப் பந்துவீசி மேற்கிந்தியத் தீவுகள் அணியை 117 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தார்கள். மே.இ. தீவுகள் அணியில் ஒருவராலும் 25 ரன்கள் கூட எடுக்க முடியவில்லை. டி சில்வா, லக்‌ஷன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.

ADVERTISEMENT

டி20 தொடர் 1-1 என சமனில் உள்ளது. 3-வது டி20 ஆட்டம் மார்ச் 8 அன்று நடைபெறவுள்ளது. 

Tags : West Indies vs Sri Lanka T20I
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT