செய்திகள்

சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகி 50 வருடங்கள்: கவாஸ்கருக்கு சச்சின் அழகான வாழ்த்து!

6th Mar 2021 11:54 AM

ADVERTISEMENT

 

இந்திய முன்னாள் வீரர் கவாஸ்கர், சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகி இன்றுடன் 50 வருடங்கள் ஆகிவிட்டன. கவாஸ்கர் மற்றும் திலிப் சர்தேசாய் வரவால் அந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றது. 1962-ல் மேற்கிந்தியத் தீவுகளில் 0-5 என டெஸ்ட் தொடரில் தோற்ற இந்தியா, 1971-ல் 1-0 என டெஸ்ட் தொடரை வென்று சாதனை செய்தது. 21 வயது கவாஸ்கர், தனது அறிமுக டெஸ்ட் தொடரில் 4 டெஸ்டுகளில் 774 ரன்கள் குவித்து கிரிக்கெட் உலகை ஆச்சர்யப்படுத்தினார். 

சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகி 50 வருடங்கள் ஆனதையொட்டி ட்விட்டரில் கவாஸ்கருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் சச்சின் டெண்டுல்கர். அவர் கூறியதாவது:

50 வருடங்களுக்கும் முன்பு இந்நாளில் கிரிக்கெட் உலகைப் புயல் போல கவாஸ்கர் தாக்கினார். தனது அறிமுகத் தொடரிலேயே 774 ரன்கள் எடுத்தார். வளர்ந்து வந்த என்னைப் போன்றவர்கள் அவரை வியந்து பார்த்தோம். மேற்கிந்தியத் தீவுகளிலும் பிறகு இங்கிலாந்திலும் இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றது. திடீரென இந்திய விளையாட்டுக்கு ஓர் அர்த்தம் கிடைத்தது. சிறுவனான நான் அவரை வியந்து பார்த்து அவரைப் போலவே இருக்க முயன்றேன். அது மாறவே இல்லை. அவர் தான் என்னுடைய கதாநாயகன். சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகி 50 வருடங்கள் ஆனதற்காக கவாஸ்கருக்கு என்னுடைய வாழ்த்துகள். அதேபோல 1971 அணிக்கும் என்னுடைய வாழ்த்துகள். நீங்கள் அனைவரும் எங்களைப் பெருமைப்படுத்தி வெளிச்சத்தை காண்பித்தீர்கள் என்றார். 

ADVERTISEMENT

Tags : Tendulkar Gavaskar
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT