செய்திகள்

அதிக டெஸ்டுகளுக்கு கேப்டன்: தோனியின் சாதனையை சமன் செய்தார் விராட் கோலி!

5th Mar 2021 10:46 AM | ச.ந. கண்ணன்

ADVERTISEMENT

 

ஆமதாபாத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் நடைபெற்று வருகிறது.

இந்த டெஸ்டில் இந்திய அணிக்குத் தலைமை தாங்கி தோனியின் சாதனையை சமன் செய்துள்ளார் விராட் கோலி. இந்திய அணியில் அதிக டெஸ்டுகளுக்கு கேப்டனாக இருந்த பெருமை இதற்கு முன்பு தோனியிடம் இருந்தது. தற்போது கோலி, தோனியின் சாதனையைச் சமன் செய்துள்ளார். இருவரும் 60 டெஸ்டுகளுக்கு கேப்டன்களாக இருந்துள்ளார்கள். எனினும் தோனியை விடவும் கோலி அதிக வெற்றிகளைப் பெற்றுள்ளார். தோனிக்கு 27 வெற்றிகள், கோலிக்கு 35 வெற்றிகள்.

கேப்டன் கோலியின் சாதனைகள்

ADVERTISEMENT

அதிக டெஸ்ட் வெற்றிகளைக் கண்ட இந்திய கேப்டன்கள்

கோலி - 60 டெஸ்டுகள்*, 35 வெற்றிகள், 14 தோல்விகள்
தோனி - 60 டெஸ்டுகள், 27 வெற்றிகள், 18 தோல்விகள்
கங்குலி - 49 டெஸ்டுகள், 21 வெற்றிகள், 13 தோல்விகள்

(* ஆமதாபாத் 4-வது டெஸ்டின் முடிவு சேர்க்கப்படவில்லை)

வெளிநாடுகளில் அதிக டெஸ்ட் வெற்றிகளைக் கண்ட இந்திய கேப்டன்கள்

கோலி - 30 டெஸ்டுகள், 13 வெற்றிகள், 12 தோல்விகள், 5 டிராக்கள்
கங்குலி - 28 டெஸ்டுகள், 11 வெற்றிகள், 10 தோல்விகள், 7 டிராக்கள்
தோனி - 30 டெஸ்டுகள், 6 வெற்றிகள், 15 தோல்விகள், 9 டிராக்கள்

சேனா (SENA, South Africa, England, New Zealand & Australia) நாடுகளில் அதிக வெற்றிகளைக் கண்ட இந்திய கேப்டன்கள்

கோலி - 15 டெஸ்டுகள் - 4 வெற்றிகள் - 10 தோல்விகள் - 2 டிராக்கள்
தோனி - 23 டெஸ்டுகள் - 3 வெற்றிகள் - 14 தோல்விகள் - 6 டிராக்கள்
டிராவிட் - 6 டெஸ்டுகள் - 2 வெற்றிகள் - 2 தோல்விகள் - 2 டிராக்கள்
கங்குலி - 12 டெஸ்டுகள் - 2 வெற்றிகள் - 5 தோல்விகள் - 5 டிராக்கள்

கேப்டன் கோலியின் டெஸ்ட் வெற்றிகள்

இந்தியாவில்: 29 டெஸ்டுகளில் 22 வெற்றிகள்*
வெளிநாடுகளில்: 30 டெஸ்டுகளில் 13 வெற்றிகள்

(* ஆமதாபாத் 4-வது டெஸ்ட் சேர்க்கப்படவில்லை)

கேப்டன் கோலியின் வெளிநாட்டு வெற்றிகள்

இலங்கையில் - 5 வெற்றிகள்
மேற்கிந்தியத் தீவுகளில் - 4 வெற்றிகள்
ஆஸ்திரேலியா - 2
தென் ஆப்பிரிக்கா - 1
இங்கிலாந்து - 1
நியூசிலாந்து - 0

ஆஸ்திரேலியாவில் தோனி & கோலி

ஆஸ்திரேலியாவில் கோலி - 7 டெஸ்டுகள், 2 வெற்றி, 2 டிரா, 3 தோல்விகள்
ஆஸ்திரேலியாவில் தோனி - 5 டெஸ்டுகள், 0 வெற்றி, 1 டிரா, 4 தோல்விகள்

Tags : virat kohli MS Dhoni
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT