செய்திகள்

ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்கள்: இலங்கைக்கு எதிரான டி20 ஆட்டத்தில் பொலார்ட் சாதனை! (விடியோ)

4th Mar 2021 01:21 PM

ADVERTISEMENT

 

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் பொலார்ட், இலங்கை அணிக்கு எதிராக ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். 

கூலிட்ஜில் நடைபெற்ற முதல் டி20 ஆட்டத்தில் முதலில் விளையாடிய இலங்கை அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்தது. இதன்பிறகு விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, 13.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கேப்டன் பொலார்ட் 11 பந்துகளில் 6 சிக்ஸர்களுடன் 38 ரன்கள் எடுத்தார். அகிலா தனஞ்ஜெயா, டி சில்வா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.

இந்த ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் பொலார்ட், தனஞ்ஜெயா ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். தனது 2-வது ஓவரில் எவின் லூயிஸ், கிறிஸ் கெயில், நிகோலஸ் பூரன் ஆகியோரின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை படைத்தார் அகிலா தனஞ்ஜெயா. ஆனால் அவருக்கு அடுத்த ஓவர் அதைவிடவும் மறக்க முடியாததாக அமைந்தது. அந்த ஓவரின் 6 பந்துகளையும் சிக்ஸருக்கு அனுப்பி சாதனை படைத்தார் பொலார்ட். டி20 உலகக் கோப்பையில் யுவ்ராஜ் சிங், இங்கிலாந்தைச் சேர்ந்த பிராடின் ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்தார். அதன்பிறகு சர்வதேச டி20யில் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்கள் அடித்துள்ளார் பொலார்ட்.

ADVERTISEMENT

சர்வதேச கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்கள் அடித்த வீரர்கள்

கிப்ஸ் (தெ.ஆ.), 2007 50 ஓவர் உலகக்கோப்பையில் நெதர்லாந்துக்கு எதிராக, பந்துவீச்சாளர் - டான் வான் பன்ச்
யுவ்ராஜ் சிங் (இந்தியா), 2007 டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக, பந்துவீச்சாளர் - பிராட்
பொலார்ட் (மே.இ. தீவுகள்), 2021-ல் இலங்கைக்கு எதிரான டி20 ஆட்டத்தில், பந்துவீச்சாளர் - அகிலா தனஞ்ஜெயா

Tags : Pollard West Indies
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT