செய்திகள்

4-வது டெஸ்ட்: 15 ஓவர்களில் இங்கிலாந்து 45/3

4th Mar 2021 10:53 AM

ADVERTISEMENT

 

இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் இங்கிலாந்து அணி மீண்டும் தடுமாற்றத்துடன் பேட்டிங் செய்து வருகிறது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணிக்கு எதிராக 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. 2-வது டெஸ்டை 317 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி தொடரை 1-1 என சமன் செய்தது. 3-வது டெஸ்ட், பகலிரவு ஆட்டமாக ஆமதாபாத்தில் நடைபெற்றது. இந்த டெஸ்டை இரு நாள்களில் வென்றது இந்தியா. டெஸ்ட் தொடா், தற்போது 2-1 என இந்தியாவுக்குச் சாதகமாக உள்ளது. 4-வது டெஸ்ட், ஆமதாபாத்தில் இன்று தொடங்கியுள்ளது. 

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் பும்ராவுக்குப் பதிலாக சிராஜ் இடம்பெற்றுள்ளார்கள். இங்கிலாந்து அணியில் பிராட், ஆர்ச்சருக்குப் பதிலாக லாரன்ஸ், பெஸ் இடம்பெற்றுள்ளார்கள்.

ADVERTISEMENT

இங்கிலாந்து அணி 15 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 41 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT