செய்திகள்

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட கபில் தேவ்

3rd Mar 2021 04:45 PM

ADVERTISEMENT

 

முன்னாள் வீரர் கபில் தேவ், கரோனா தடுப்பூசியை தில்லியில் உள்ள மருத்துவமனையில் செலுத்திக் கொண்டாா்.

61 வயதான கபில்தேவ், கிரிக்கெட் உலகில் மிகச்சிறந்த ஆல்ரவுண்டா்களில் ஒருவராக கருதப்படுகிறாா். 1983-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு தலைமையேற்றதுடன் இந்தியாவுக்கு முதல் முறையாகக் கோப்பையையும் பெற்றுத் தந்தாா். இந்திய அணிக்காக 131 டெஸ்டுகள், 225 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 1994-ல் கடைசியாக விளையாடினார். 

நெஞ்சுவலி காரணமாக அக்டோபர் மாத இறுதியில் புதுதில்லி ஃபோா்டிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கபில்தேவுக்கு இதய அறுவைச் சிகிச்சை (ஆஞ்சியோ பிளாஸ்டி) நடைபெற்றது.

ADVERTISEMENT

நாட்டில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் 16-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. மருத்துவா்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளா்களுக்கும் முன்களப் பணியாளா்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. இத்தகைய சூழலில், நாட்டிலுள்ள 60 வயதுக்கு மேற்பட்டோா், இணைநோய் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் திங்கள்கிழமை தொடங்கின. 

இந்நிலையில் முன்னாள் வீரர் கபில் தேவ், கரோனா தடுப்பூசியின் முதல் தவணையை தில்லி மருத்துவமனையில் செலுத்திக் கொண்டார். 

Tags : COVID19 Kapil Dev
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT