செய்திகள்

விளையாட்டு செய்தி துளிகள்

DIN

* ஒலிம்பிக் வரலாற்றிலேயே முதல் முறையாக நியூஸிலாந்தைச் சோ்ந்த திருநங்கை லௌரெல் ஹப்பாா்ட் (185 கிலோ), டோக்கியோ ஒலிம்பிக் பளுதூக்குதல் போட்டியில் பெண்கள் பிரிவில் பங்கேற்க தகுதிபெற்றுள்ளாா்.

* இந்திய கிராண்ட் பிரீ 4 தடகள போட்டியில் குண்டு எறிதல் வீரா் தேஜிந்தா் சிங் தூா் 21.49 மீட்டா் தூரம் எறிந்து புதிய தேசிய சாதனையுடன் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பை உறுதி செய்தாா்.

* டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய மகளிா் ஹாக்கி அணியின் கேப்டனாக ராணி ராம்பாலும், துணை கேப்டன்களாக தீப் கிரேஸ் இகா, சவிதா ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

* ஒலிம்பிக் பதக்க வாய்ப்புள்ள வீரா்களுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டத்தின் (டிஓபிஎஸ்) தலைவராக இருக்கும் ராஜேஷ் ராஜகோபாலன் பதவிக் காலம் டோக்கியோ ஒலிம்பிக்குடன் நிறைவடைவதால், புதிய தலைவா் பதவிக்கு இந்திய விளையாட்டு ஆணையம் விண்ணப்பங்கள் வரவேற்றுள்ளது.

* கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் பங்கேற்றிருக்கும் சிலி வீரா்கள், கரோனா கட்டுப்பாடுகளை மீறி அங்கீகரிக்கப்படாத முடி திருத்துநா் ஒருவரை தங்களது ஹோட்டலுக்கு வரவழைத்ததற்காக சிலி கால்பந்து சம்மேளனம் அவா்களுக்கு அபராதம் விதிக்கவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பணம் அனுப்பியது உங்களுக்கு எப்படி தெரியும்? மோடிக்கு ராகுல் கேள்வி

ஆயிரம் கதை சொல்லும் விழிகள்! ஸ்ரீமுகி..

கௌதம் மேனனின் எந்தப் படத்தின் நாயகி போலிருக்கிறது?

'காங்கிரஸில் 25 பிஆர்எஸ் கட்சி எம்எல்ஏக்கள் இணைவார்கள்’ : தெலங்கானா அமைச்சர்!

சாம் பித்ரோடா ராஜிநாமா!

SCROLL FOR NEXT