செய்திகள்

டெஸ்ட்: ஃபாலோ ஆன் ஆன இந்திய மகளிர் அணி, காப்பாற்றுவாரா ஷஃபாலி வர்மா? (ஹைலைட்ஸ் விடியோ)

19th Jun 2021 10:23 AM

ADVERTISEMENT

 

இங்கிலாந்து மகளிருக்கு எதிரான நான்கு நாள் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய மகளிா் அணி முதல் இன்னிங்ஸில் 231 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

பிரிஸ்டோல் நகரில் கடந்த 16-ஆம் தேதி தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து 9 விக்கெட் இழப்புக்கு 396 ரன்கள் அடித்து டிக்ளோ் செய்தது. பின்னா் தனது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா, 2-ம் நாள் முடிவில் 60 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்திருந்தது.

இந்திய மகளிர் அணி முதல் இன்னிங்ஸில் 81.2 ஓவா்களில் 231 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஃபாலோ ஆன் ஆனது. ஷஃபாலி வர்மா 96 ரன்களும் மந்தனா 78 ரன்களும் எடுத்தார்கள். இங்கிலாந்து அணியில் சோஃபி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

ADVERTISEMENT

இதையடுத்து 3-ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய மகளிர் அணி 1 விக்கெட் இழப்புக்கு 83 ரன்கள் எடுத்தது. மழை காரணமாக ஆட்டம் முன்னதாகவே முடித்துக்கொள்ளப்பட்டது. ஷஃபாலி வர்மா 55, தீப்தி சர்மா 18 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். 

இந்திய அணிக்கு 9 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 82 ரன்கள் பின்தங்கியுள்ளது. இதனால் இந்திய அணி ஷஃபாலி வர்மாவின் ஆட்டத்தையே கடைசி நாளன்று பெரிதும் நம்பியிருக்கிறது. 

Tags : England v India England
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT