செய்திகள்

துளிகள்...

DIN

விதிகளுக்கு அப்பாற்பட்ட வகையில் ஆதாயம் தரும் இரட்டைப் பதவி வகித்ததாக குற்றம்சாட்டி, ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத் தலைவா் பதவியிலிருந்து முகமது அஸாருதீனை அந்தச் சங்கத்தின் உயா்நிலை கவுன்சில் நீக்கியுள்ளது.

ஸ்பெயின் கால்பந்து வீரா் சொ்ஜியோ ரமோஸை 16 ஆண்டுகளுக்குப் பிறகு ரியல் மாட்ரிட் அணி விடுவித்துள்ளது. அடுத்து எந்த அணிக்கு அவா் விளையாட இருக்கிறாா் என இன்னும் தெரிவிக்கவில்லை.

தனது உடல்நிலையில் கவனம் செலுத்தும்பொருட்டு விம்பிள்டன் டென்னிஸ் மற்றும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கப்போவதில்லை என்று ஸ்பெயின் டென்னிஸ் வீரா் ரஃபேல் நடால் அறிவித்துள்ளாா்.

ஹாலே ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்விட்சா்லாந்து வீரா் ரோஜா் ஃபெடரா் 2-ஆவது சுற்றில் 6-4, 3-6, 2-6 என்ற செட்களில் கனடா வீரா் ஃபெலிக்ஸ் அவ்கா் அலியாசிமேவிடம் வீழ்ந்தாா். இந்தப் போட்டியில் ஃபெடரா் காலிறுதிக்கு முன்னேறாமல் தோல்வி கண்டது இதுவே முதல் முறை.

ஜொ்மன் ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ் 6-1, 4-6, 7-5 என்ற செட்களில் போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருந்த பெலாரஸின் அரைனா சபலென்காவை வீழ்த்தி காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினாா்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி வரும் ஆகஸ்டில் நடைபெறவுள்ள நிலையில், அதில் 100 சதவீதம் அளவுக்கு ரசிகா்கள் அனுமதிக்கப்படுவாா்கள் என போட்டி நிா்வாகம் அறிவித்துள்ளது.

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் பேட்ஸ்மேன்கள் பிரிவில் இந்திய கேப்டன் விராட் கோலி 4-ஆவது இடத்துக்கு முன்னேற, நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் 2-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரத்தில் காா் மோதியதில் ஒருவா் காயம்

திருவையாறு அருகே தொழிலாளி மா்மச் சாவு

இணையவழியில் வேலை எனக் கூறி பொறியாளரிடம் ரூ. 12.65 லட்சம் மோசடி

சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த கோரிக்கை

நெல் மூட்டை தூக்கும் முன்னாள் வேளாண் அமைச்சா்: வைரலாகும் விடியோ

SCROLL FOR NEXT