செய்திகள்

அஸ்வின், ஜடேஜா இருவரும் களம் காணலாம் 

17th Jun 2021 04:41 AM

ADVERTISEMENT


கடந்த சில நாள்களாக செளதாம்டனில் வெப்பம் அதிகமாக இருப்பதால், ஆடுகளம் மிகவும் வறண்டு காணப்படும். எனவே ஆட்டம் தொடரும் போக்கில் அது சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக மாறும் என்பதால் இந்திய பிளேயிங் லெவனில் ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகிய இருவருமே இடம் பிடிக்கலாம். ஆல்-ரவுண்டர்களே இந்திய அணிக்கு ஒரு சமநிலையை அளிக்கின்றனர்.

இதுபோன்ற முக்கியமான டெஸ்டுகளில் அது இந்திய அணிக்கு தேவையான ஒன்றாகும். இந்த டெஸ்டை அடுத்து இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முடிவுகளையும் பெரும்பாலும் ஆடுகளம் மற்றும் வானிலையின் போக்கு தீர்மானிக்க வாய்ப்புள்ளது. இந்த இந்திய அணி இளம் வீரர்கள் மற்றும் அனுபவ வீரர்களுடன் தகுந்த கலவையில் இருக்கிறது. நல்ல பெளலர்களும் உள்ளனர்.. 

- சுனில் காவஸ்கர் (முன்னாள் இந்திய பேட்ஸ்மேன்) 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT