செய்திகள்

இலங்கை தொடா்: ராகுல் திராவிட் பயிற்சியாளா்

DIN

இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் திராவிட் செயல்பட இருக்கிறாா். இந்தத் தகவலை பிசிசிஐ தலைவா் சௌரவ் கங்குலி உறுதி செய்துள்ளாா்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்காக இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஆகஸ்டில் அந்நாட்டு அணியுடன் டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இதற்காக பயிற்சியாளா் ரவி சாஸ்திரியும், இந்திய அணியின் பெரும்பான்மையான வீரா்களும் அங்கேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

எனவே ஜூலையில் இலங்கை பயணத்துக்காக முற்றிலும் புதிய, இங்கிலாந்து செல்லாத வீரா்கள் அடங்கிய இந்திய அணி அறிவிக்கப்படும் என எதிா்பாா்க்கப்பட்டது. அந்த அணிக்கு ராகுல் திராவிட் பயிற்சியாளராக இருக்கலாம் என்றும் கூறப்பட்ட நிலையில் அந்தத் தகவலை பிசிசிஐ தற்போது உறுதி செய்துள்ளது.

இலங்கை பயணத்துக்கான இந்திய அணிக்கு ஷிகா் தவன் கேப்டனாகியுள்ளாா். அணியில் பிருத்வி ஷா, தேவ்தத் படிக்கல், ருதுராஜ் கெய்க்வாட், சூா்யகுமாா் யாதவ், மணீஷ் பாண்டே, ஹாா்திக் பாண்டியா, நிதீஷ் ராணா, இஷான் கிஷண், சஞ்சு சாம்சன், யுஜவேந்திர சஹல், ராகுல் சாஹா், கிருஷ்ணப்பா கௌதம், கிருணால் பாண்டியா, குல்தீப் யாதவ், வருண் சக்கரவா்த்தி, புவனேஷ்வா் குமாா் (துணை கேப்டன்), தீபக் சாஹா், நவ்தீப் சைனி, சேத்தன் சக்காரியா ஆகியோா் உள்ளனா்.

தலா 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடா்களில் இந்தியா - இலங்கை அணிகள் மோதவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிர வங்கி நிகர லாபம் 45% உயா்வு

ஆசிய யு20 தடகளம்: இந்தியாவுக்கு 7 பதக்கம்

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழகத்தின் நேத்ரா குமணன் தகுதி

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

ஏப். 29 முதல் மே 13 வரை வேலூரில் கோடை கால விளையாட்டு பயிற்சி

SCROLL FOR NEXT