செய்திகள்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம்: நியூசிலாந்து அணி அறிவிப்பு, சான்ட்னர் நீக்கம்!

15th Jun 2021 11:12 AM

ADVERTISEMENT

 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆட்டத்துக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் இங்கிலாந்தின் சௌதாம்ப்டன் நகரில் ஜூன் 18-ம் தேதி தொடங்கவுள்ளது. இதற்காக இந்திய அணி இங்கிலாந்துக்குச் சென்றுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்துக்கு - மைக்கேல் காவ், ரிச்சர்ட் இல்லிங்வொர்த் ஆகியோர் கள நடுவர்களாகவும் தொலைக்காட்சி நடுவராக ரிச்சர்ட் கெட்டில்பாரோவும் பணியாற்றவுள்ளார்கள். கிறிஸ் பிராட், போட்டியின் நடுவராகப் பணியாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-0 என நியூசிலாந்து வென்றுள்ளது. 2-வது டெஸ்டில் காயம் காரணமாக நியூசி. கேப்டன் வில்லியம்சன் விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக டாம் லதம் கேப்டனாகச் செயல்பட்டார்.

ADVERTISEMENT

இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்துக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கேன் வில்லியம்சன் அணியில் மீண்டும் இடம்பெற்றுள்ளார். காயம் காரணமாக 2-வது டெஸ்டில் விளையாடாத சான்ட்னர் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் சிறப்பாகப் பந்துவீசிய அஜாஸ் படேல் அணியில் மீண்டும் இடம்பெற்றுள்ளார்.

நியூசிலாந்து அணி

கேன் வில்லியம்சன் (கேப்டன்), டாம் லதம், கான்வே, ராஸ் டெய்லர், ஹென்றி நிகோல்ஸ், வில் யங், பிஜே வாட்லிங், டாம் பிளெண்டல், கிராண்ட்ஹோம், கைல் ஜேமிசன், டிம் செளதி, வாக்னர், அஜாஸ் படேல், டிரெண்ட் போல்ட், மேட் ஹென்றி. 

ADVERTISEMENT
ADVERTISEMENT