செய்திகள்

டி காக் 141 ரன்கள்: முதல் டெஸ்டில் தடுமாறும் மே.இ. தீவுகள் அணி

12th Jun 2021 02:52 PM

ADVERTISEMENT

 

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 322 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.

கிராஸ் ஐலட்டில் நடைபெறும் இந்த டெஸ்டில் டாஸ் வென்ற மே.இ. தீவுகள் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. தென் ஆப்பிரிக்க அணி அற்புதமாகப் பந்துவீசியதால் முதல் இன்னிங்ஸில் மே.இ. தீவுகள் அணி 40.5 ஓவர்களில் 97 ரன்களுக்குச் சுருண்டது. தெ.ஆ. அணியின் என்கிடி 5 விக்கெட்டுகளையும் அன்ரிக் நோர்கியா 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். 

இதன்பிறகு முதல் இன்னிங்ஸை விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி, முதல் நாள் முடிவில் 43 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்தது. வான் டர் டுசென் 34, குயிண்ட  டி காக் 4 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

ADVERTISEMENT

170 பந்துகளில் 141 ரன்கள் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார் டி காக். இதனால் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில், 96.5 ஓவர்களில் 322 ரன்கள் எடுத்தது.

முதல் இன்னிங்ஸில் 225 ரன்கள் பின்தங்கிய மே.இ. தீவுகள் அணி, 2-ம் நாள் முடிவில் 30 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 82 ரன்கள் எடுத்துள்ளது. சேஸ் 21, பிளாக்வுட் 10 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். 143 ரன்கள் பின்தங்கிய நிலையில் கைவசம் 6 விக்கெட்டுகள் உள்ளதால் தோல்வியைத் தவிர்க்கப் போராடி வருகிறது மே.இ. தீவுகள் அணி.

Tags : West Indies Quinton de Kock South Africa
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT