செய்திகள்

இலங்கை தொடர்: மும்பையில் தனிமைப்படுத்தப்படும் இந்திய வீரர்கள்

12th Jun 2021 05:37 PM

ADVERTISEMENT

 

இலங்கைச் சுற்றுப்பயணத்துக்குத் தேர்வான இந்திய வீரர்கள் அனைவரும் திங்கள் முதல் இரு வாரங்களுக்கு மும்பையில் தனிமைப்படுத்தப்படுகிறார்கள்.

இந்திய அணி அடுத்த மாதம் இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற முன்னணி வீரர்கள் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்பதால், இலங்கைக்கு எதிரான தொடர்களுக்கு ஷிகர் தவன் தலைமையிலான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இலங்கைக்குச் செல்லவுள்ள இந்திய வீரர்கள் அனைவரும் திங்கள் முதல் இரு வாரங்களுக்கு மும்பையில் உள்ள தனியார் விடுதியில் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். மும்பைக்கு வரும் முன்பு கரோனா பரிசோதனை மேற்கொண்டிருக்க வேண்டும் என வீரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இரு வாரங்களுக்குப் பிறகு ஷிகர் தவன் தலைமையிலான இந்திய அணி ஜூன் 28 அன்று இலங்கைக்குச் செல்லவுள்ளது. அங்கு தனியார் விடுதியில் மேலும் மூன்று நாள்களுக்கு இந்திய வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். அதன்பிறகு பயிற்சியைத் தொடங்குவார்கள்.

ADVERTISEMENT

இந்தியா - இலங்கை அணிகள் பங்கேற்கும் ஒருநாள் தொடர், ஜூலை 13 அன்று தொடங்கி, ஜூலை 18 அன்று நிறைவுபெறுகிறது. டி20 தொடர் ஜூலை 21 அன்று தொடங்கி, ஜூலை 25 அன்று நிறைவுபெறுகிறது. அனைத்து ஆட்டங்களும் கொழும்பில் நடைபெறவுள்ளன.

Tags : Sri Lanka Mumbai quarantine
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT