செய்திகள்

பயிற்சி ஆட்டத்தில் பந்த் சதம்: இஷாந்த் 3 விக்கெட்டுகள்

12th Jun 2021 08:39 PM

ADVERTISEMENT


இந்திய அணியே இரண்டாகப் பிரிக்கப்பட்டு நடைபெற்று வரும் பயிற்சி ஆட்டத்தில் ரிஷப் பந்த் அதிரடியாக விளையாடி சதமடித்துள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்துக்குத் தயாராகி வரும் இந்திய அணி வெள்ளிக்கிழமை முதல் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது. இந்திய அணியே இரண்டாகப் பிரிக்கப்பட்டு பயிற்சி ஆட்டம் நடைபெற்று வருகிறது.

இதில் 2-ம் நாள் ஆட்டம் குறித்து பிசிசிஐ சுட்டுரையில் பதிவிட்டுள்ளது. அதன்படி, ஷுப்மன் கில் 135 பந்துகளில் 85 ரன்கள் குவித்து சிறப்பான தொடக்கத்தைத் தந்திருக்கிறார். அவரைத் தொடர்ந்து ரிஷப் பந்த் அதிரடி காட்டி 94 பந்துகளில் 121 ரன்கள் விளாசியுள்ளார். பந்துவீச்சில் அதிகபட்சமாக இஷாந்த் சர்மா 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இந்திய அணியில் மூன்றாவது வேகப்பந்துவீச்சாளராக முகமது சிராஜ் களமிறங்கலாம் என ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் இஷாந்த் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT

Tags : WTC final
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT