செய்திகள்

கரோனா விதிமுறை மீறல்: இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு ஓராண்டு தடை

31st Jul 2021 05:00 PM

ADVERTISEMENT


கரோனா பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதற்காக இலங்கை கிரிக்கெட் வீரர்கள் குசால் மெண்டிஸ், நிரோஷன் டிக்வெலா மற்றும் தனுஷ்கா குணத்திலகா ஆகியோருக்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் ஓராண்டு தடை விதித்துள்ளது.

மேலும் இலங்கை ரூபாயில் 1 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து இசுரு உடானா ஓய்வு

இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடர்களுக்கு மத்தியில் மெண்டிஸ், டிக்வெலா மற்றும் குணத்திலகா ஆகியோர் பாதுகாப்பு வளையங்களை மீறி சாலைகளில் சுற்றித் திரிந்தது கேமிராக்களில் பதிவானது. இதைத் தொடர்ந்து, அவர்கள் பாதியிலேயே இடைநீக்கம் செய்யப்பட்டு நாடு திரும்ப அழைக்கப்பட்டனர்.  

ADVERTISEMENT

இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட ஓராண்டும், உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட 6 மாதங்களும் தடை விதிக்க முடிவு செய்து இலங்கை கிரிக்கெட் வாரியம் வெள்ளிக்கிழமை நடவடிக்கை எடுத்தது.

Tags : Sri Lanka Cricket
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT