செய்திகள்

இலங்கையில் மேலும் இரு இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கரோனா பாதிப்பு

30th Jul 2021 01:34 PM

ADVERTISEMENT

 

இலங்கையில் கிருனால் பாண்டியாவுக்கு அடுத்ததாக சஹால், கே. கெளதம் ஆகிய இரு இந்திய வீரர்களும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இலங்கைக்குச் சென்று ஒருநாள், டி20 தொடர்களில் இந்திய அணி விளையாடியது. ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 எனவும் டி20 தொடரை இலங்கை 2-1 எனவும் வென்றன.

இதையும் படிக்க | ஜேம்ஸ் ஆண்டர்சன் பிறந்த நாள்: டெஸ்ட் கிரிக்கெட்டை வசப்படுத்திய சாதனையாளர்

ADVERTISEMENT

இந்திய ஆல்ரவுண்டர் கிருனால் பாண்டியாவுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து, அவருக்கு நெருக்கமான தொடா்பில் இருந்ததாக எட்டு வீரா்கள் தனிமைப்படுத்தப்பட்டார்கள். இதனால் கடைசி இரு டி20 ஆட்டங்களில் இந்திய அணியில் புதிய வீரா்களுக்கு வாய்ப்புகள் கிடைத்தன.

இதையும் படிக்க | ஒலிம்பிக்ஸ் ஹாக்கி: அயர்லாந்தை வீழ்த்தியது இந்திய மகளிர் அணி

இந்நிலையில் தனிமைப்படுத்த வீரர்களில் சஹால், கே. கெளதம் ஆகிய இருவருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கிருனால் பாண்டியா, சஹால், கெளதம் ஆகிய மூன்று வீரர்களும் இலங்கையில் தங்கி சிகிச்சை எடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட இதர நான்கு வீரர்கள் உள்பட இந்திய அணியினர் இன்று இந்தியாவுக்குத் திரும்புகிறார்கள். தனிமைப்படுத்தப்பட்ட பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவருக்கும் கரோனா பாதிப்பு இல்லை என்பதால் இலங்கையிலிருந்து நேராக இங்கிலாந்துக்குச் சென்று இந்திய அணியினருடன் இணையவுள்ளார்கள். 

Tags : Chahal COVID 19 Gowtham
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT