செய்திகள்

இங்கிலாந்துக்குப் பறக்கும் சூர்யகுமார் யாதவ், பிரித்வி ஷா

24th Jul 2021 04:23 PM

ADVERTISEMENT


இங்கிலாந்துக்கு தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியில் மூன்று பேருக்கு காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சூர்யகுமார் யாதவ், பிரித்வி ஷா ஆகியோர் அணியில் மாற்று வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 5-ம் தேதி தொடங்குகிறது. இதற்கான 3 நாள் பயிற்சி ஆட்டம் டர்ஹமில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தின்போது இந்திய வீரர்கள் ஆவேஷ் கான் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்குக் காயம் ஏற்பட்டது. இதுதவிர தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மன் கில் ஏற்கெனவே காயம் காரணமாக நாடு திரும்பிவிட்டார்.

இந்த நிலையில் இவர்களுக்கு மாற்று வீரர்களாக இலங்கை தொடரில் இடம்பெற்றுள்ள சூர்யகுமார் யாதவ், பிரித்வி ஷா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஜெயந்த் யாதவும் மாற்று வீரராக இங்கிலாந்து புறப்படுவார் என்று தகவல்கள் வெளியான நிலையில், அவர் தற்போது புறப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

இதுபற்றி பிசிசிஐ மூத்த நிர்வாகி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தது:

ADVERTISEMENT

"பிரித்வி மற்றும் சூர்யா இலங்கையிலிருந்து இங்கிலாந்து புறப்படுகின்றனர். ஜெயந்த் யாதவும் இங்கிலாந்துக்குப் பயணிக்க வேண்டியது. ஆனால், தனிமைப்படுத்துதல் காரணமாக திட்டங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜெயந்த் தற்போது செல்லவில்லை. பிரித்வி மற்றும் சூர்யா கொழும்பிலிருந்து இலங்கைக்கு பாதுகாப்பு வளையத்திலிருந்து இங்கிலாந்து பாதுகாப்பு வளையத்துக்கு நேரடியாகப் பயணிக்கின்றனர். இலங்கை டி20 தொடருக்கு மத்தியில் இங்கிலாந்து புறப்படுவார்களா அல்லது தொடர் முடிந்தவுடன் புறப்படுவார்களா என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

ஆனால், அவர்கள்தான் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு மாற்று வீரர்கள்" என்றார் அவர். 

Tags : Suryakumar
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT