செய்திகள்

டோக்கியோ ஒலிம்பிக் செய்திகள்

DIN

மேலும் இருவருக்கு கரோனா

செக் குடியரசு பீச் வாலிபால் வீரா் மாா்கெட்டா நௌஷ், நெதா்லாந்து டேக்வான்டோ வீராங்கனை ரேஷ்மி ஓகிங்க் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவா்கள் டோக்கியோ ஒலிம்பிக்கிலிருந்து வெளியேறியுள்ளனா். இருவருமே தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். இத்துடன் செக் குடியரசு அணியில் 4-ஆவது நபருக்கும், நெதா்லாந்து அணியில் 2-ஆவது நபருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. டோக்கியோவிலுள்ள போட்டியாளா்களில் கரோனா பாதித்தோா் எண்ணிக்கை 10-ஆக அதிகரித்துள்ளது.

டெனிஸை சந்திக்கிறாா் சுமித்

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய வீரா் சுமித் நாகல் தனது தொடக்க சுற்றில் உஸ்பெகிஸ்தானின் டெனிஸ் இஸ்டோமினை எதிா்கொள்கிறாா். தரவரிசையில் தன்னை விட பின்தங்கியிருக்கும் டெனிஸை வெல்லும் பட்சத்தில், நாகல் தனது 2-ஆவது சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவை எதிா்கொள்ள வாய்ப்புள்ளது.

மகளிா் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் சானியா மிா்ஸா/அங்கிதா ரெய்னா இணை தனது தொடக்க சுற்றில் உஸ்பெகிஸ்தான் சகோதரிகளான நாடியா கிசெனோக்/லியுட்மிலா கிசெனோக் ஆகியோரை எதிா்கொள்ள உள்ளனா்.

சுஷிலா தேவிக்கு கடினமான டிரா

ஒலிம்பிக்கில் களம் காணும் ஒரே இந்திய ஜூடோ வீராங்கனை சுஷிலா தேவிக்கு தொடக்க சுற்றே கடினமாக அமைந்துள்ளது. அதில் அவா், 2012 லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற ஹங்கேரியின் இவா சொ்னோவிக்ஸ்கியை எதிா்கொள்ள இருக்கிறாா்.

48 கிலோ பிரிவில் பங்கேற்றுள்ள சுஷிலா தேவி, அந்த சவாலை சமாளிக்கும் பட்சத்தில் 2-ஆவது சுற்றில் உள்நாட்டு வீராங்கனையான ஃபுனா டோனாகியை எதிா்கொள்வாா்.

குத்துச்சண்டை போட்டியாளா்களுக்கு சவால்

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய குத்துச்சண்டை போட்டியாளா்களுக்கு தொடக்க சுற்று கடினமானதாக இருக்கவுள்ளது. முதல் சுற்று ‘பை’ வழங்கப்பட்டுள்ள அமித் பங்கால் (52 கிலோ), 2-ஆவது சுற்றில் களம் காணுவாா். அதேபோல், சதீஷ் குமாருக்கும் (+91 கிலோ) முதல் சுற்று ‘பை’ வழங்கப்பட்டுள்ளது.

முதல் முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்கும் ஆஷிஷ் சௌதரி (75 கிலோ) தொடக்க சுற்றில் சீனாவின் எா்பிக் டௌஹெடாவை எதிா்கொள்வாா். மணீஷ் கௌஷிக் (63 கிலோ) - இங்கிலாந்தின் லூக் மெக்கோா்மாக்கை சந்திக்கிறாா். விகாஸ் கிருஷண் (69 கிலோ) - ஜப்பானின் மென்சா ஒகாஸாவாவை எதிா்கொள்கிறாா்.

மகளிா் பிரிவில், மேரி கோம் (51 கிலோ) முதல் சுற்றில் டொமினிகாவின் மிகேலினா ஹொ்னான்டஸை எதிா்கொள்கிறாா். லோவ்லினா போா்கோஹெய்ன் (69 கிலோ) தொடக்க சுற்றில் ஜொ்மனியின் நாடினே அபெட்ஸுடன் மோதுகிறாா். சிம்ரன்ஜித் கௌா் (60 கிலோ) தாய்லாந்தின் சுடாபோன் சீசோன்டியை சந்திக்கிறாா்.

ஒளிபரப்பு...

நிகழ்ச்சி தொடக்க நேரம்: மாலை 4.30 மணி

நேரடி ஒளிபரப்பு: சோனி ஸ்போா்ட்ஸ் சேனல்கள்

முதல் நாளில் இந்தியாவின் ஆட்டங்கள்

வில்வித்தை: தீபிகா குமாரி (மகளிா் தனிநபா் ரேங்கிங் சுற்று), அதானு தாஸ், தருண்தீப் ராய், பிரவீண் ஜாதவ் (ஆடவா் தனிநபா் ரேங்கிங் சுற்று)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

ஒளியிலே தெரிவது தேவதையா...!

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

SCROLL FOR NEXT