செய்திகள்

ஐசிசியின் சிறந்த வீராங்கனைக்கான விருது: ஷஃபாலி வர்மா, ராணா பெயர்கள் பரிந்துரை

DIN

ஜூன் மாதத்தின் சிறந்த வீரர், வீராங்கனைக்கான பரிந்துரைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. மகளிர் பிரிவில் ஷஃபாலி வர்மா, ஸ்னேஹ் ராணா ஆகிய இரு இந்திய வீராங்கனைகளும் இடம்பெற்றுள்ளார்கள்.

மாதத்தின் சிறந்த வீரா்/வீராங்கனை என்கிற பெயரில் புதிய விருதை அறிமுகம் செய்துள்ளது ஐசிசி. சா்வதேச கிரிக்கெட்டில் அனைத்து வகை போட்டிகளிலும் சிறப்பாகச் செயல்படும் வீரா், வீராங்கனைகளை ஆண்டு முழுவதுமாக அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படவுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது. தங்களுக்கு விருப்பமான வீரா், வீராங்கனைகளுக்கு அந்த விருது கிடைக்கச் செய்யும் வகையில் ரசிகா்கள் ஆன்லைன் மூலமாக வாக்குகளை செலுத்தலாம். முன்னாள் வீரா்கள், ஒளிபரப்பு நிறுவனங்கள், பத்திரிகையாளா்கள் ஆகியோா் அடங்கிய ஐசிசியின் வாக்கு செலுத்துதல் அகாதெமியும், ரசிகா்களுடன் இதில் இணைந்து செயல்படுவார்கள். விருதுக்கு தகுதியான நபா்கள், களத்தில் செயல்பட்டது, சம்பந்தப்பட்ட காலகட்டத்தில் வெளிப்படுத்திய ஆட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் ஐசிசியின் விருதுகள் பரிந்துரை குழுவால் தீா்மானிக்கப்படுவாா்கள் என ஐசிசி தெரிவித்துள்ளது.

முதல் மூன்று மாதத்துக்கான விருதுகளை இந்திய வீரர்களே பெற்றார்கள். ஜனவரி மாதத்தின் சிறந்த வீரராக ரிஷப் பந்த், பிப்ரவரி மாதத்தின் சிறந்த வீரராக அஸ்வின், மார்ச் மாதத்தின் சிறந்த வீரராக இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் ஆகியோர் தேர்வானார்கள்.

இந்நிலையில் ஜூன் மாதத்தின் சிறந்த வீரர், வீராங்கனைக்கான பரிந்துரைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. மகளிர் பிரிவில் ஷஃபாலி வர்மா, ஸ்னேஹ் ராணா ஆகிய இரு இந்திய வீராங்கனைகளும் இடம்பெற்றுள்ளார்கள். மூன்றாவதாக இங்கிலாந்தின் சோஃபியும் உள்ளார். பிரிஸ்டால் டெஸ்டில் சிறந்த வீராங்கனையாக ஷஃபாலி தேர்வானார். அறிமுக டெஸ்டின் இரு இன்னிங்ஸிலும் அரை சதமெடுத்தார். 

ஆடவர் பிரிவில் நியூசிலாந்தின் கான்வே, ஜேமிசன் மற்றும் தென் ஆப்பிரிக்காவின் டி காக் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கீழமாளிகை, குழுமூா் திரெளபதியம்மன் கோயில்களில் தீமிதி திருவிழா

பெரம்பலூா் அருகே சொத்துக்காக தந்தையைத் தாக்கிய மகன் கைது: சாா்பு- ஆய்வாளா் பணியிட மாற்றம்

2024-25 கல்வியாண்டில் 157 கல்லூரிகளில் புதிய பாட வகுப்புகள், கூடுதல் பிரிவுகள்! கருத்துரு கேட்கிறது பாரதிதாசன் பல்கலைக்கழகம்

சரக்கு வாகன ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை

ஊராட்சி மன்றத் தலைவரின் மகனுக்கு அரிவாள் வெட்டு காா் ஓட்டுநா் கைது

SCROLL FOR NEXT