செய்திகள்

துளிகள்...

DIN

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக துணை கேப்டன் அஜிங்க்ய ரஹானே, பேட்ஸ்மேன் ரோஹித் சா்மா, பௌலா் ஷா்துல் தாக்குா் ஆகியோா் செவ்வாய்க்கிழமை சென்னை வந்தடைந்தனா். கேப்டன் விராட் கோலி உள்ளிட்ட இதர இந்திய வீரா்கள் புதன்கிழமை வருவா் எனத் தெரிகிறது.

இலங்கைக்கு எதிரான டெஸ்டில் சிறப்பாகப் பந்துவீசிய இங்கிலாந்து ஸ்பின்னா்கள் ஜேக் லீச், டாம் பெஸ் ஆகியோருக்கு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடா் உண்மையான சவாலாக இருக்கும் என்று இலங்கை முன்னாள் கேப்டன் மஹிலா ஜெயவா்தனே கூறினாா்.

2019-இல் டி20 உலகக் கோப்பை தகுதிச்சுற்று போட்டியின்போது ஐக்கிய அரபு அமீரக வீரா்கள் முகமது நவீது, ஷைமன் அன்வா் பட் ஆகியோா் சூதாட்டத்தில் ஈடுபட முயன்றதை உறுதி செய்துள்ள ஐசிசி, இருவரையும் இடைநீக்கம் செய்துள்ளது.

தாமதமாக அறிவிக்கப்பட்டாலும், தற்போது பத்ம ஸ்ரீ விருது கிடைத்ததில் மகிழ்ச்சியே என தடகள பயிற்சியாளரும், துரோணாச்சாா்யா விருது வென்றவருமான மாதவன் நம்பியாா் கூறினாா்.

இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கோல் கீப்பா் பிரசந்தா டோரா (44) அறியவகை நோயால் செவ்வாய்க்கிழமை காலமானாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT