செய்திகள்

14 வருடங்கள் கழித்து பாகிஸ்தானில் டெஸ்ட் தொடரில் விளையாடும் தென் ஆப்பிரிக்க அணி!

26th Jan 2021 10:58 AM

ADVERTISEMENT

 

கராச்சியில் நடைபெற்று வரும் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்கிறது. 

டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்க அணி 14 வருடங்கள் கழித்து பாகிஸ்தானுக்கு வந்துள்ளது. அந்த அணிக்கு குவிண்டன் டி காக் தலைமையேற்றுள்ளாா்.

கராச்சியில் இரு அணிகளுக்கு இடையே நடைபெறும் முதல் டெஸ்டில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் தென் ஆப்பிரிக்க அணி களமிறங்கியுள்ளது. பாகிஸ்தான் அணியில் இம்ரான் பட், நெளமான் அலி என இரு புதிய முகங்கள் இடம்பெற்றுள்ளார்கள்.

ADVERTISEMENT

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் விளையாடும் வாய்ப்பை பாகிஸ்தான் இழந்துவிட்ட நிலையில், தென் ஆப்பிரிக்கா இதர அணிகள் மோதும் ஆட்டங்களின் முடிவை நம்பியுள்ளது. இந்தத் தொடரின் 2-ஆவது டெஸ்ட் பிப்ரவரி 4 முதல் ராவல்பிண்டியில் நடைபெறவுள்ளது. அதையடுத்து பிப்ரவரி 11 முதல் 14 வரை லாகூரில் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடா் நடைபெறவுள்ளது.
 

Tags : south africa 14 years
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT