செய்திகள்

கோலிதான் எப்போதும் கேப்டன், நான் துணை கேப்டன்: ரஹானே

DIN


டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிதான் என்றும் அவரது வருகையால் எவ்வித மாற்றமும் இருக்காது என்றும் அஜின்க்யா ரஹானே தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக அஜின்க்யா ரஹானே சென்னை வரும் வழியில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்தார். அப்போது விராட் கோலியின் தலைமைப் பண்பு உள்பட பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

ரஹானே பேசியது:

"கோலியின் வருகையால் எதுவும் மாறாது. கோலிதான் டெஸ்ட் அணியின் கேப்டன், எப்போதுமே அவர்தான் கேப்டன். நான் துணை கேப்டன். அவர் இல்லாதபோது அணியை வழிநடத்துவது எனது பணி. இந்திய அணியின் வெற்றிக்கு முழு உழைப்பையும் முயற்சியையும் தருவது எனது பொறுப்பு. 

கேப்டனாக பணியை எப்படி செய்கிறோம் என்பது மிகவும் முக்கியமானது. இதுவரை நான் வெற்றிகரமாக இருந்துள்ளேன். எதிர்காலத்திலும் இதுபோன்ற முடிவுகளையே அளிப்பேன் என்று நம்புகிறேன். 

நானும், கோலியும் எப்போதுமே நல்ல உறவை பகிர்ந்துள்ளோம். அவர் எனது பேட்டிங்கை எப்போதுமே பாராட்டுவார். இருவரும் வெளிநாட்டு சூழல்களிலும் இந்திய அணிக்காகவும் மறக்க முடியாத ஆட்டங்களை விளையாடியுள்ளோம். விராட் 4-வது வீரராகவும், நான் 5-வது வீரராகவும் களமிறங்க அதுவே உதவியது. நாங்கள் நிறைய பாட்னர்ஷிப்களை அமைத்துள்ளோம்.  

எங்களது ஆட்டத்துக்கு நாங்கள் ஒருவருக்கொருவர் எப்போதுமே ஆதரவாக இருப்போம். நாங்கள் களத்தில் இருக்கும்போது எதிரணியின் பந்துவீச்சு குறித்து பேசுவோம். மோசமான ஷாட்களை ஆடும்போது ஒருவருக்கொருவர் எச்சரித்துக் கொள்வோம்.

விராட் கோலி கூர்மையான கேப்டன். களத்தில் நல்ல முடிவுகளை எடுப்பார். சுழற்பந்துவீச்சாளர்கள் பந்துவீசும்போது அவர் என்னையே நம்புவார். ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா பந்துவீசும்போது ஸ்லிப் பகுதிகளில் கேட்ச் பிடிப்பதை என்னுடைய முக்கியத் திறன்களின் ஒன்றாக அவர் நம்புவார். அவர் என்னிடம் நிறைய எதிர்பார்ப்பார். அதைப் பூர்த்தி செய்ய முயற்சிப்பேன்.

உண்மையைச் சொல்லப்போனால் அணியில் என்னுடைய இடம் அபாயகரமான நிலையில் இருப்பதாக நான் ஒருபோதும் உணர்ந்ததில்லை. கேப்டனுக்கும், அணி நிர்வாகத்துக்கும் எப்போதுமே என் மீது நம்பிக்கை உண்டு. ஆம், சில தொடர்களில் வீரருக்கு தோல்விகள் ஏற்படலாம். ஆனால், அதற்காக அவரது திறமை முற்றிலுமாக போய்விட்டது என்று ஆகிவிடாது. இழந்த ஃபார்மை மீட்க பேட்ஸ்மேனுக்கு ஒரே ஒரு ஆட்டம்போதும். 

நான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாத நேரத்தில், கேப்டன் எப்போதுமே எனக்கு ஊக்கமாக இருந்தார். கேப்டனின் ஆதரவு இருக்கிறது என்பது தெரிந்தால் எப்போதுமே கவலைகள் இல்லாமல் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்தலாம்.

தலைமைப் பண்பு நபருக்கு நபர் வேறுபடும். ஒரு அணி எப்படி சிறந்ததோ கேப்டனும் அப்படியே. ஆட்டத்தை வென்றாலும், தொடரை வென்றாலும் அது எப்போதுமே கூட்டு முயற்சி. ஒரு தனி நபரின் பங்களிப்பால் கிடைத்த வெற்றி கிடையாது. அணியில் இருக்கும் வீரர்கள்தான் உங்களை நல்ல தலைவராக மாற்றுவார்கள். இந்த வெற்றிக்கான (ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் வெற்றி) முழு பாராட்டுகளும் எனது அணிக்கே சேரும்."

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT