செய்திகள்

காலே டெஸ்ட்: புதிய சாதனையை நிகழ்த்தியுள்ள இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள்!

25th Jan 2021 03:33 PM

ADVERTISEMENT

 

இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்டில் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்கள்.

இலங்கையின் காலே நகரில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை 139.3 ஓவா்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 381 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஏஞ்சலோ மேத்யூஸ் 110 ரன்கள் விளாசினாா். இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆண்டா்சன் 6 விக்கெட்டுகள் சாய்த்தாா்.

இங்கிலாந்து  அணி முதல் இன்னிங்ஸில் 116.1 ஓவர்களில் 344 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கேப்டன் ஜோ ரூட் 186 ரன்களும் பட்லர் 55 ரன்களும் எடுத்தார்கள். இலங்கையின் லசித் எம்புல்தெனியா 7 விக்கெட்டுகள் வீழ்த்தினார். முதல் இன்னிங்ஸில் 37 ரன்கள் முன்னிலை பெற்ற இலங்கை 2-வது இன்னிங்ஸில் தனது அனைத்து விக்கெட்டுகளையும் சுழற்பந்து வீச்சாளர்களிடம் இழந்தது. அந்த அணி 35.5 ஓவர்களில் 126 ரன்களுக்குச் சுருண்டது. டாம் பெஸ் 4, ஜாக் லீச் 4, ஜோ ரூட் 2 விக்கெட்டுகள் எடுத்தார்கள்.

ADVERTISEMENT

இலங்கை அணியின் முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் எடுத்தார்கள். 2-வது இன்னிங்ஸில் இங்கிலாந்தின் சுழற்பந்து வீச்சாளர்கள் அனைத்து விக்கெட்டுகளும் எடுத்ததால் புதிய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இதற்கு முன்பு ஓர் அணியின் முதல் இன்னிங்ஸ் விக்கெட்டுகளை வேகப்பந்து வீச்சாளர்களும் 2-வது இன்னிங்ஸ் விக்கெட்டுகளை சுழற்பந்து வீச்சாளர்களும் முழுமையாக எடுத்ததில்லை. இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல்முறையாக இப்படியொரு சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT