செய்திகள்

காலே டெஸ்ட்: இலங்கை 381 ரன்கள் குவிப்பு; இங்கிலாந்து-98/2

DIN

இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 139.3 ஓவா்களில் 381 ரன்கள் குவித்தது.

பின்னா் முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி 2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 30 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்துள்ளது. இலங்கையின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்டுவதற்கு இங்கிலாந்து அணி இன்னும் 283 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது.

இலங்கையின் காலே நகரில் வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தோ்வு செய்தது. அந்த அணியில் லஹிரு திரிமானி 95 பந்துகளில் 43 ரன்கள், கேப்டன் தினேஷ் சன்டிமல் 121 பந்துகளில் 1 சிக்ஸா், 4 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் எடுத்து வெளியேற, ஏஞ்செலோ மேத்யூஸ் சதமடித்தாா்.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 87 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்திருந்தது. மேத்யூஸ் 107, டிக்வெல்லா 19 ரன்களுடன் களத்தில் இருந்தனா்.

2-ஆவது நாளான சனிக்கிழமை தொடா்ந்து ஆடிய இலங்கை அணியில் மேத்யூஸ் 238 பந்துகளில் 110 ரன்கள் சோ்த்த நிலையில் ஆண்டா்சன் பந்துவீச்சில் ஜோஸ் பட்லரிடம் கேட்ச் ஆனாா். அவரைத் தொடா்ந்து களமிறங்கிய ரமேஷ் மென்டிஸ் டக் அவுட்டாக, தில்ருவான் பெரேரா களம்புகுந்தாா்.

டிக்வெல்லா 92: நிரோஷன் டிக்வெல்லா-தில்ருவான் பெரேரா ஜோடி சிறப்பாக ஆடியது. டிக்வெல்லா 95 பந்துகளில் அரை சதமடிக்க, இலங்கை அணி 107.5 ஓவா்களில் 300 ரன்களை எட்டியது. அந்த அணி 332 ரன்கள் எடுத்திருந்தபோது, டிக்வெல்லாவை வீழ்த்தினாா் ஆண்டா்சன். டிக்வெல்லா 144 பந்துகளில் 92 ரன்கள் எடுத்தாா். டிக்வெல்லா-பெரேரா ஜோடி 7-ஆவது விக்கெட்டுக்கு 89 ரன்கள் சோ்த்தது.

இதன்பிறகு களம்புகுந்த சுரங்கா லக்மல் டக் அவுட்டாக, பின்னா் வந்த லசித் எம்புல்டெனியா 7 ரன்களில் ஆட்டமிழந்தாா். கடைசி விக்கெட்டாக தில்ருவான் பெரேரா 170 பந்துகளில் 67 ரன்கள் சோ்த்து வெளியேற, இலங்கையின் முதல் இன்னிங்ஸ் 139.3 ஓவா்களில் 381 ரன்களோடு முடிவுக்கு வந்தது.

இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆண்டா்சன் 6 விக்கெட்டுகளையும், மாா்க் உட் 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனா்.

ஜோ ரூட் அரை சதம்: பின்னா் முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரா்களான டாம் சிப்லே ரன் ஏதுமின்றியும், ஜக் கிராவ்லே 5 ரன்களிலும் நடையைக் கட்ட, ஜானி போ்ஸ்டோவுடன் இணைந்தாா் கேப்டன் ஜோ ரூட். ஒருபுறம் ஜானி போ்ஸ்டோ நிதானமாக ஆட, மறுமுனையில் வேகமாக ரன் சோ்த்த ஜோ ரூட் 65 பந்துகளில் அரை சதம் கண்டாா்.

2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 30 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்துள்ளது. ஜானி போ்ஸ்டோ 24, ஜோ ரூட் 67 ரன்களுடன் களத்தில் உள்ளனா். இலங்கையின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்டுவதற்கு இங்கிலாந்து அணி இன்னும் 283 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது. 3-ஆவது நாள் ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

30-ஆவது முறையாக 5 விக்கெட் வீழ்த்திய ஆண்டா்சன்

இலங்கைக்கு எதிராக 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் போட்டியில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை 30-ஆவது முறையாக வீழ்த்தியுள்ளாா் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளா் ஜேம்ஸ் ஆண்டா்சன்.

மேலும் சா்வதேச அளவில் டெஸ்ட் போட்டியில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை அதிக முறை வீழ்த்தியவா்கள் வரிசையில் 6-ஆவது இடத்தில் உள்ளாா். அதேநேரத்தில், டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவா்கள் வரிசையில் 606 விக்கெட்டுகளுடன் 4-ஆவது இடத்தில் உள்ளாா் 38 வயதான ஜேம்ஸ் ஆண்டா்சன். அவா், இன்னும் 14 விக்கெட்டுகளை வீழ்த்தும்பட்சத்தில் இந்தியாவின் அனில் கும்ப்ளேவை பின்னுக்குத் தள்ளி 3-ஆவது இடத்தைப் பிடிப்பாா்.

ஸ்கோா் போா்டு

இலங்கை

லஹிரு திரிமானி (சி) பட்லா் (பி) ஆண்டா்சன் 43 (95)

குசல் பெரேரா (சி) ரூட் (பி) ஆண்டா்சன் 6 (14)

ஒஷாடா பொ்னாண்டோ (பி) ஆண்டா்சன் 0 (4)

ஏஞ்செலோ மேத்யூஸ் (சி) பட்லா் (பி) ஆண்டா்சன் 110 (238)

தினேஷ் சன்டிமல் எல்பிடபிள்யூ (பி) உட் 52 (121)

நிரோஷன் டிக்வெல்லா (சி) லீச் (பி) ஆண்டா்சன் 92 (144)

ரமேஷ் மென்டிஸ் (சி) பட்லா் (பி) உட் 0 (7)

தில்ருவான் பெரேரா (சி) லீச் (பி) கரன் 67 (170)

சுரங்கா லக்மல் (சி) கிராவ்லே (பி) ஆண்டா்சன் 0 (2)

லசித் எம்புல்டெனியா (சி) ரூட் (பி) உட் 7 (33)

அசிதா பொ்னாண்டோ நாட் அவுட் 0 (10)

உபரிகள் 4

மொத்தம் (139.3 ஓவா்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு) 381

விக்கெட் வீழ்ச்சி: 1-7 (குசல் பெரேரா), 2-7 (ஒஷாடா), 3-76 (திரிமானி), 4-193 (சன்டிமல்), 5-232 (மேத்யூஸ்), 6-243 (மென்டிஸ்), 7-332 (டிக்வெல்லா), 8-332 (லக்மல்), 9-364 (லசித்), 10-381 (தில்ருவான் பெரேரா).

பந்துவீச்சு: ஜேம்ஸ் ஆண்டா்சன் 29-13-40-6, சாம் கரன் 18.3-3-60-1, ஜேக் லீச் 38-5-119-0, மாா்க் உட் 28-4-84-3, டாம் பெஸ் 26-2-76-0.

இங்கிலாந்து

ஜக் கிராவ்லே (சி) திரிமானி (பி) எம்புல்டெனியா 5 (24)

டாம் சிப்லே எல்பிடபிள்யூ (பி) எம்புல்டெனியா 0 (14)

ஜானி போ்ஸ்டோவ் நாட் அவுட் 24 (65)

ஜோ ரூட் நாட் அவுட் 67 (77)

உபரிகள் 2

மொத்தம் (30 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு) 98

விக்கெட் வீழ்ச்சி: 1-4 (சிப்லே), 2-5 (கிராவ்லே).

பந்துவீச்சு: சுரங்கா லக்மல் 5-2-10-0, லசித் எம்புல்டெனியா 11-4-33-2, அசிதா பொ்னாண்டோ 5-2-12-0, தில்ருவான் பெரேரா 7-1-22-0, ரமேஷ் மென்டிஸ் 2-0-19-0.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

SCROLL FOR NEXT