செய்திகள்

இங்கிலாந்துக்காக அதிக டெஸ்ட் ரன்கள்: ஒரேநாளில் 2 பேரை முந்திய ரூட்

24th Jan 2021 05:27 PM

ADVERTISEMENT


டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக அதிக ரன்களைக் குவித்த வீரர்கள் வரிசையில் கேப்டன் ஜோ ரூட் 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் ஆட்டம் காலேவில் நடைபெற்று வருகிறது. இதில் 2-வது நாள் ஆட்டநேர முடிவில், ஜோ ரூட் 67 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 

இதன்மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் 8,119 ரன்களை எட்டிய அவர் ஜெஃப்ரி பாய்காட்டை முந்தினார். பாய்காட் டெஸ்ட் கிரிக்கெட்டில் 8,114 ரன்கள் குவித்திருந்தார்.

இந்த நிலையில், 3-வது நாள் ஆட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கியது. 67 ரன்களில் ஆட்டத்தைத் தொடங்கிய ரூட், தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தத் தொடரில் மேலும் ஒரு சதத்தை எட்டினார். சதமடித்தும் சோர்வடையாமல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரூட் தொடர்ச்சியாக 2-வது இரட்டைச் சதத்தை நோக்கி விளையாடி வருகிறார்.

ADVERTISEMENT

சற்று முன்பு வரை (மாலை 5.15 மணி) ரூட் 182 ரன்கள் குவித்து விளையாடி வருகிறார். இதன்மூலம், கெவின் பீட்டர்சன் (8,181 ரன்கள்) மற்றும் டேவிட் கோவர் (8,231 ரன்கள்) ஆகியோரை முந்தியுள்ளார் ரூட்.

இங்கிலாந்துக்காக அதிக டெஸ்ட் ரன்களைக் குவித்த வீரர்கள் வரிசையில் ஜோ ரூட் தற்போது 4-வது இடத்தில் உள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களைக் குவித்த இங்கிலாந்து வீரர்கள்:

Tags : root
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT