செய்திகள்

'விரைவில் சந்திப்போம்': இந்தியா வந்தடைந்தார் ஸ்டோக்ஸ்

24th Jan 2021 06:50 PM

ADVERTISEMENT


இந்தியாவுடனான டெஸ்ட் தொடருக்காக இங்கிலாந்து ஆல்-ரௌண்டர் பென் ஸ்டோக்ஸ் இந்தியா வந்தடைந்துள்ளார்.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் பிப்ரவரி 5-ம் தேதி தொடங்குகிறது. இலங்கைக்கு எதிராக நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் ஆட்டத்தில் பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர் உள்ளிட்ட வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டது.

இதன்மூலம், ஸ்டோக்ஸ் முன்கூட்டியே இந்தியா புறப்பட்டார். 

இதுபற்றி சுட்டுரைப் பக்கத்தில் விமானத்தில் இருப்பது போன்ற புகைப்படத்துடன், 'விரைவில் சந்திப்போம் இந்தியா' என்று ஸ்டோக்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

இதன்மூலம், சுட்டுரையில் தற்போது அவர் டிரெண்டிங்கில் உள்ளார்.

Tags : Stokes
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT