டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக அதிக ரன்களைக் குவித்த வீரர்கள் வரிசையில் கேப்டன் ஜோ ரூட் முன்னாள் வீரர் ஜெஃப்ரி பாய்காட்டை முந்தியுள்ளார்.
இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் ஆட்டம் காலேவில் நடைபெற்று வருகிறது. இதில் 2-வது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்துள்ளது. ஜோ ரூட் 67 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இதன்மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் 8,119 ரன்களை எட்டிய அவர் ஜெஃப்ரி பாய்காட்டை முந்தினார். பாய்காட் டெஸ்ட் கிரிக்கெட்டில் 8,114 ரன்கள் குவித்துள்ளார்.
இங்கிலாந்துக்காக அதிக டெஸ்ட் ரன்களைக் குவித்த வீரர்கள் வரிசையில் ஜோ ரூட் தற்போது 6-வது இடத்தில் உள்ளார்.
ADVERTISEMENT
- அலெஸ்டர் குக் - 12,472 ரன்கள்
- கிரஹாம் கூச் - 8,900 ரன்கள்
- அலெக் ஸ்டீவார்ட் - 8,463 ரன்கள்
- டேவிட் கோவர் - 8,231 ரன்கள்
- கெவின் பீட்டர்சன் - 8,181 ரன்கள்