செய்திகள்

இதுதான் டிராவிட்: இங்கிலாந்து வீரர்களுக்கும் கிரிக்கெட் வகுப்பு!

DIN


சுழற்பந்துவீச்சை எதிர்கொள்வது பற்றி ராகுல் டிராவிட் அளித்த அறிவுரையினை இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர்கள் ஸாக் கிராலே மற்றும் டொமினிக் சிப்லேவுக்கு அந்த அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் வழங்கியுள்ளார்.

இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இங்கிலாந்தின் இளம் வீரர்கள் ஸாக் கிராலே மற்றும் டொமினிக் சிப்லே சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ள திணறி வருகின்றனர்.

இருவரும், 2-வது டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸ் உள்பட மொத்தம் 3 இன்னிங்ஸிலும் லசித் எம்புல்டேனியா சுழலில் ஆட்டமிழந்துள்ளனர்.

இந்த நிலையில் இந்தியாவின் ஜாம்பவான் ராகுல் டிராவிட் அளித்த 2 பக்க அறிவுரையினை இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அத்துடன், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தைக் குறிப்பிட்டு கிராலே மற்றும் சிப்லேவிடம் இதைக் கொடுங்கள், தேவைப்பட்டால் இதுபற்றி அவர்கள் என்னுடன் விரிவாகப் பேசலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சுழற்பந்துவீச்சை எதிர்கொள்வது குறித்து கெவின் பீட்டர்சனுக்கு ராகுல் டிராவிட் 2 பக்க அளவில் வகுப்பு எடுத்துள்ளார். சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ள கால்களை எப்படி நகர்த்த வேண்டும், எப்படி பயிற்சி எடுக்க வேண்டும் என தொழில்நுட்ப ரீதியாக மிகவும் நுணுக்கமான விஷயங்களைக் குறிப்பிட்டு விளக்கியுள்ளார் டிராவிட்.

எந்தக் காலகட்டம் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், இங்கிலாந்து-வங்கதேச கிரிக்கெட் தொடர் ஒன்றின்போது டிராவிட் இதனை வழங்கியிருக்கக்கூடும்.

அது தனக்கு பலனளித்ததைத் தொடர்ந்து, அதே அறிவுரையை இங்கிலாந்தின் அடுத்த தலைமுறையிடம் பகிர்ந்துள்ளார் பீட்டர்சன்.

இதற்கு முந்தைய டிவீட்டில் பீட்டர்சன் பதிவிட்டதாவது:

"சுழற்பந்துவீச்சை எதிர்கொள்வது குறித்து ராகுல் டிராவிட் எனக்கு அனுப்பிய இமெயிலை கிராலே மற்றும் சிப்லே பார்க்க வேண்டும். இந்த மெயில் என்னுடைய ஆட்டத்தை மாற்றியது."

இங்கிலாந்து கிரிக்கெட் அணி அடுத்த மாதம் 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில்  இந்தியாவை எதிர்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

இன்று யோகமான நாள்!

SCROLL FOR NEXT