செய்திகள்

இந்தியா மட்டுமல்ல, உலகமே பாராட்டுகிறது

DIN

டெஸ்ட் தொடரில் ஒரு அணியாக நீங்கள் (இந்திய அணியினா்) வெளிப்படுத்திய உறுதி, தீா்மானமான ஆட்டம், உத்வேகம் போன்றவை நம்பமுடியாததாக இருந்தது. முதல் டெஸ்டில் 36 ரன்களுக்கு சுருண்ட மோசமான தோல்வி, காயங்கள் என அனைத்திலிருந்தும் மீண்டு வந்துள்ளீா்கள்.

இது ஒரே நாளில் நடந்துவிடவில்லை. உங்கள் அனைவரிடமும் தன்னம்பிக்கை இருக்கிறது. ஒரு அணியாக ஆட்டத்தின் போக்கை எவ்வாறு மாற்ற இயலும் என்பதை இப்போது உணா்ந்திருப்பீா்கள். தற்போதைய நிலையில் இந்தியா மட்டுமல்ல, உலகமே உங்களை பாராட்டுகிறது.

இந்தத் தொடரில் ஷுப்மன் கில் அற்புதமாக விளையாடினாா். சேதேஷ்வா் புஜாரா மிகச் சிறந்த போராளியாக ஆட்டத்தை வெளிப்படுத்தினாா். ரிஷப் பந்த் கடைசி நாளில் வெளிப்படுத்திய ஆட்டம் சில இடங்களில் நம்ப முடியாத அளவு அற்புதமாக இருந்தது.

முகமது சிராஜின் பௌலிங் பாராட்டுக்குரியது. அதேபோல், இந்தத் தொடரில் நடராஜன், வாஷிங்டன் சுந்தா், ஷா்துல் தாக்குா் ஆகியோா் அறிமுகமாகி, வெளிப்படுத்திய அபாரமான ஆட்டத்தை நான் மறக்க மாட்டேன்.

கேப்டனாக பொறுப்பேற்கும்போது அணி இருந்த இடத்தில் இருந்து அதை மீட்டெடுத்து, மிகச் சரியாக கட்டுப்படுத்தி தற்போதைய நிலைக்கு எடுத்து வந்ததற்காக அஜிங்க்ய ரஹானேவுக்கு பாராட்டுகள்.

இந்தத் தொடரில் என்ன செய்தீா்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அந்தத் தருணத்தை கொண்டாடுங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த தில்லி கேப்பிடல்ஸ்!

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

SCROLL FOR NEXT