செய்திகள்

டிராவிட் & புஜாரா: ஆஸ்திரேலியாவில் சிறப்பாக விளையாடிய வீரர் யார்?

21st Jan 2021 01:11 PM

ADVERTISEMENT

 


இந்திய அணியின் மிகச்சிறந்த டெஸ்ட் வீரர்களான ராகுல் டிராவிடும் புஜாராவும் ஆஸ்திரேலிய மண்ணில் எப்படி விளையாடியிருக்கிறார்கள்?

கடந்த 20 வருடங்களில் ஆஸ்திரேலியாவில் மிகச்சிறப்பாக விளையாடி வருகிறது இந்திய அணி. 2000-ம் ஆண்டுக்குப் பிறகு இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு 6 முறை சுற்றுப்பயணம் செய்துள்ளது. 2003-04, 2007-2008, 2011-12, 2014-15, 2018-19, 2020-21. இவற்றில் 2003-04 தொடரை 1-1 என டிரா செய்தது. 2007-08-ல் 1-2 எனத் தோற்றது. 2011-12-ல் 0-4 எனத் தோற்றது. 2014-15-ல் 0-2 எனத் தோற்றது. ஆனால் 2018-19, 2020-21 என இரு தொடர்களிலும் 2-1 என வென்று அசத்தியுள்ளது. 

ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடர்களிலும் தனி டெஸ்டுகளிலும் இந்திய அணி வென்றதற்கு டிராவிடும் புஜாராவும் முக்கியப் பங்களித்துள்ளார்கள். மகத்தான நடுவரிசை வீரர்களான இருவரும் ஒரே வித பாணியில் விளையாடக் கூடியவர்கள். நிதானமான ஆட்டத்தால் நீண்ட நேரம் களத்தில் நின்று ரன்கள் எடுத்தவர்கள்.

ADVERTISEMENT

ராகுல் டிராவிடும் புஜாராவும் ஆஸ்திரேலிய மண்ணில் எப்படி விளையாடியிருக்கிறார்கள்?

டிராவிட் 1143 ரன்கள், சராசரி 43.96, சதங்கள்: 1, அரை சதங்கள்: 6 ( 15 டெஸ்டுகள், 30 இன்னிங்ஸில் 2872 பந்துகளை எதிர்கொண்டுள்ளார்). பந்துகள்/இன்னிங்ஸ்: 95.73

புஜாரா 993 ரன்கள், சராசரி 45.29, சதங்கள்: 3, அரை சதங்கள்: 5 ( 11 டெஸ்டுகள், 21 இன்னிங்ஸில் 2657 பந்துகளை எதிர்கொண்டுள்ளார்). பந்துகள்/இன்னிங்ஸ்: 126.52

ஒரு இன்னிங்ஸுக்கு அதிக பந்துகள், அதிக சராசரிகளை வைத்துப் பார்க்கும்போது ஆஸ்திரேலியாவில் டிராவிடை விடவும் சிறப்பாக விளையாடியிருக்கிறார் புஜாரா. மேலும், இரு தொடர் வெற்றிகளிலும் அவர் பங்கெடுத்துள்ளார். 

Tags : Pujara Dravid
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT