செய்திகள்

பிரிஸ்பேன் டெஸ்ட் 2-ம் நாள் முடிவில் இந்திய அணி 62/2: ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 369 ரன்கள்

16th Jan 2021 01:02 PM

ADVERTISEMENT

 

இந்தியாவுக்கு எதிரான 4-ஆவது மற்றும் கடைசி டெஸ்டில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 369 ரன்கள் எடுத்துள்ளது. 2-ம் நாள் முடிவில் இந்திய அணி 26 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் எடுத்துள்ளது.

இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் உள்ள காபா மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 87 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்தது. டிம் பெயின் 38, கேம்ரூன் கிரீன் 28 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 115.2 ஓவர்களில் 369 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. லபுசேன் 108, பெயின் 50, கிரீன் 47, வேட் 45 ரன்களும் எடுத்தார்கள். நடராஜன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் சிராஜ் ஒரு விக்கெட்டையும் எடுத்தார்கள். 

இதன்பிறகு விளையாடிய இந்திய அணி 2-ம் நாள் தேநீர் இடைவேளையின்போது 26 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் எடுத்தது. ஷுப்மன் கில் 7, ரோஹித் சர்மா 44 ரன்களில் ஆட்டமிழந்தார்கள்.

ADVERTISEMENT

இந்நிலையில் கடைசிப் பகுதியின் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. இதனால் தேநீர் இடைவேளைக்குப் பிறகு ஆட்டத்தைத் தொடர முடியாமல் 2-வது நாள் முடிவடைந்தது. 

2-ம் நாள் முடிவில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 26 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 8, ரஹானே 2 ரன்களில் களத்தில் உள்ளார்கள். 

 

Tags : India Australian wickets
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT