செய்திகள்

டெஸ்ட் தொடரின் மிகச் சிறந்த பந்தில் ஆட்டமிழந்தேன்: புஜாரா

DIN

டெஸ்ட் தொடரில் வீசப்பட்ட மிகச்சிறந்த பந்தில் என்னுடைய விக்கெட்டைப் பறிகொடுத்தேன் என இந்திய பேட்ஸ்மேன் புஜாரா கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது. ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் டி20 தொடரை 2-1 என வென்றது. 

டெஸ்ட் தொடரில், முதல் டெஸ்டை 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது ஆஸ்திரேலியா. மெல்போர்னில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 1-1 என சமன் செய்துள்ளது. 3-வது டெஸ்ட் சிட்னியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸி. கேப்டன் டிம் பெயின், பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 105.4 ஓவர்களில் 338 ரன்கள் எடுத்தது. இந்திய அணி இன்று மிகவும் சுமாராக விளையாடி, 100.4 ஓவர்கள் விளையாடி, 244 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 3-ம் நாள் முடிவில் 197 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்ஸில் 29 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்துள்ளது. 

இந்த டெஸ்டில் இந்திய வீரர் புஜாரா 176 பந்துகளை எதிர்கொண்டு 5 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுத்தார்.

இந்நிலையில் 3-வது நாள் ஆட்டம் பற்றி புஜாரா கூறியதாவது:

என்னுடைய விக்கெட்டை வீழ்த்திய பந்து, டெஸ்ட் தொடரில் வீசப்பட்ட மிகச்சிறந்த பந்துகளில் ஒன்று. நான் சதமோ இரட்டைச் சதமோ அடித்திருந்தாலுமே என்னால் அதை எதுவும் செய்திருக்க முடியாது. அந்தப் பந்தை நான் விளையாடியே ஆகவேண்டும். கூடுதலாக எகிறியது. ஒரு நல்ல பந்தில் விக்கெட்டை இழந்தேன். இதை நீங்கள் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். 

கம்மின்ஸ் நெ.1 டெஸ்ட் பந்துவீச்சாளர். அதை அவர் தொடர்ந்து நிரூபித்து வருகிறார். என்னை வீழ்த்திய பந்து, வேறு எந்த பேட்ஸ்மேனையும் வீழ்த்தியிருக்கும். 

ரிஷப் பந்தை இழந்ததுதான் திருப்புமுனையாக அமைந்துவிட்டது. அதுவரை நாம் நல்ல நிலைமையில் இருந்தோம். நானும் ரிஷப் பந்தும் ஆட்டமிழந்த பிறகு நிலைமை மாறிவிட்டது. 330-340 வரை ஆட வேண்டும் என நாங்கள் நினைத்திருந்தோம். ரிஷப் பந்தின் விக்கெட்டால் நான் கவனம் சிதறவில்லை. நான் கவனமாகத்தான் இருந்தேன். ஒரு அருமையான பந்தில் தான் ஆட்டமிழந்தேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT