செய்திகள்

பல்கேரியா குத்துச்சண்டை: காலிறுதியில் ஜோதி குலியா

DIN

புது தில்லி: பல்கேரியாவில் நடைபெறும் ஸ்ட்ரான்ட்ஜா நினைவு குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் ஜோதி குலியா (51 கிலோ பிரிவு) காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். 

தனது முந்தைய சுற்றில் இரு முறை உலக சாம்பியனான கஜகஸ்தானின் நாஸிம் கைஜாய்பியை எதிர்கொண்ட குலியா, அவரை 3-2 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தினார். இதையடுத்து குலியா தனது காலிறுதியில் ருமேனியாவின் பெரிஜோக் லாக்ரமியாவ்ராவை எதிர்கொள்கிறார். அதேபோல், 75 கிலோ பிரிவில் களம் கண்டுள்ள இந்திய வீராங்கனை பாக்யவதி கச்சாரி 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் ரஷியாவின் அன்னா கலிமோவாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். ஆடவர் பிரிவில், இந்தியாவின் நவீன் பூரா (69 கிலோ) 3-2 என்ற கணக்கில் ஆர்மீனியாவின் அர்மென் மஷாகார்யானை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதிபெற்றார். 

முன்னதாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சுற்றுகளில் இந்தியாவின் நவீன் குமார் (91 கிலோ), அங்கித் கடானா (75 கிலோ), சச்சின் குமார் (81 கிலோ) ஆகியோர் தங்களது பிரிவில் தோல்வி கண்டனர். 30 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இந்தப் போட்டியில் இந்தியாவிலிருந்து 12 பேர் குழு பங்கேற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் 42 டிகிரி வரை அதிகரிக்கும்!

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

SCROLL FOR NEXT