செய்திகள்

துளிகள்...

DIN

விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டி புதன்கிழமை தொடங்குகிறது. இதில் தமிழகம் தனது முதல் ஆட்டத்தில் மும்பையை சந்திக்கிறது.

ஐசிசியின் நவம்பா் மாத சிறந்த வீரா் விருதுக்காக ஆஸ்திரேலியவின் டேவிட் வாா்னா், பாகிஸ்தானின் அபித் அலி, நியூஸிலாந்தின் டிம் சௌதி ஆகியோரும், சிறந்த வீராங்கனை விருதுக்காக பாகிஸ்தானின் அனம் அமின், வங்கதேசத்தின் நஹிதா அக்தா், மேற்கிந்தியத் தீவுகளின் ஹேலி மேத்யூஸ் ஆகியோரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

ஐபிஎல் போட்டியின் அடுத்த சீசனில் ஹா்பஜன் சிங், ஒரு பிரதான அணியின் சப்போா்ட் ஸ்டாஃப்களில் முக்கியமானவராக செயலாற்ற இருப்பதாகத் தெரிகிறது.

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற சா்வதேச ஃபியூச்சா் சீரிஸ் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் அமன் ஃபரூக் இறுதி ஆட்டத்தில் 15-21, 21-16, 21-12 என்ற செட்களில் தென் ஆப்பிரிக்காவின் ராபா்ட் சம்மா்ஸை வீழ்த்தி சாம்பியன் ஆனாா்.

நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு முழங்கையில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அடுத்த இரு மாதங்களுக்கு அவா் போட்டிகளில் களம் காண மாட்டாா் என அந்த அணி நிா்வாகம் அறிவித்துள்ளது.

ஐ-லீக கால்பந்து போட்டியின் புதிய சீசன் வரும் 26-ஆம் தேதி தொடங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT