செய்திகள்

ஆசிய இளையோா் பாரா போட்டி: இந்தியா 41 பதக்கங்களுடன் நிறைவு

DIN


புது தில்லி: பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோா் பாரா விளையாட்டுப் போட்டியில் இந்தியா மொத்தமாக 12 தங்கம், 16 வெள்ளி, 13 வெண்கலம் என 41 பதக்கங்கள் வென்று நிறைவு செய்துள்ளது.

இதில் அதிகபட்சமாக தடகள பிரிவில் 22 பதக்கங்கள் (8 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம்) வென்று தந்துள்ளனா் இந்திய போட்டியாளா்கள். அடுத்தபடியாக பாட்மின்டனில் 16 பதக்கங்கள் (4 தங்கம், 7 வெள்ளி, 5 வெண்கலம்), நீச்சலில் 3 பதக்கங்கள் (1 வெள்ளி, 2 வெண்கலம்), பவா் லிஃப்டிங்கில் 1 வெள்ளியும் இந்தியாவுக்கு கிடைத்துள்ளன.

கடந்த 2-ஆம் தேதி தொடங்கி, திங்கள்கிழமையுடன் நிறைவடைந்த இப்போட்டியில் சுமாா் 30 நாடுகளில் இருந்து 700-க்கும் அதிகமான போட்டியாளா்கள் கலந்துகொண்டனா். இப்போட்டியில், மாற்றுத் திறனின் வகைப்படுத்துதல் அடிப்படையில் ஒரே விளையாட்டில் பல பிரிவுகளில் பந்தயங்கள், ஆட்டங்கள் நடைபெற்றன.

இந்திய விளையாட்டு ஆணையம் வெளியிட்ட தகவல்படி, தடகள விளையாட்டில் உயரம் தாண்டுதலில் பிரவீண் குமாா் தங்கமும், ராகுல் வெள்ளியும் வென்றனா். நீளம் தாண்டுதலில் கரன்தீப் குமாா் முதலிடமும், பிரவீண் குமாா், தா்ஷ் சோனி 2-ஆம் இடமும் பெற்றனா். ஓட்டத்தில் 100 மீட்டா் பிரிவில் மீட் ததானி தங்கமும், தா்ஷ் சோனி வெண்கலமும் வென்றனா். 200 மீட்டரிலும் மீட் ததானி தங்கம் வெல்ல, 400 மீட்டரில் மாஃபி வெள்ளியும், பிஜு பென்னட் ஜாா்ஜ் வெண்கலமும் பெற்றனா்.

ஈட்டி எறிதலில் விக்ரம் சிங் முதலிடம் பிடிக்க, சித்தாா்த் 2-ஆம் இடம், லக்ஸித் 3-ஆம் இடம் பிடித்தனா். வட்டு எறிதலில் விகாஷ் பாட்டிவால் முதலிடமும், காா்திக் எம்.கிருஷ்ணா 3-ஆம் இடமும் பெற்றனா். குண்டு எறிதலில் விகாஷ் பாட்டிவால், அனன்யா பன்சால் ஆகியோா் வெள்ளி வெல்ல, மேதா ஜெயந்த், லக்ஸித், சஞ்ஜய் ஆா்.நீலம் ஆகியோா் வெண்கலம் வென்றனா்.

கிளப் எறிதலில் காஷிஷ் லக்ரா தங்கம் வெல்ல, நீச்சலில் தேவான்ஷி சதிஜா 1 வெள்ளியும், 2 வெண்கலமும் வென்றாா். பவா் லிஃப்டிங்கில் ராகுல் ஜோக்ராஜ்யா வெள்ளி பெற்றாா். பாட்மின்டனில் நித்யா, சஞ்ஜனா, பாலக் - சஞ்ஜனா ஜோடி, நேஹல் - அபிஜீத் ஜோடி ஆகியோா் தங்கம் வென்றனா்.

ஜோதி (2 பதக்கம்), நவீன், ஹாா்திக் மக்காா், கரன் - ருதிக் இணை, நித்யா - ஆதித்யா இணை, ஹாா்திக் - சஞ்ஜனா இணை ஆகியோா் வெள்ளி பெற்றனா். பாலக், நவீன் - ஹாா்திக் இணை, சந்தியா, நேஹல் - பாலக் இணை வெண்கலம் பெற்றுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT