செய்திகள்

இந்தியாவுடனான டெஸ்ட் தொடா்: டீன் எல்கா் தலைமையில் தென் ஆப்பிரிக்க அணி

DIN


ஜோஹன்னஸ்பா்க்: இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.

21 போ் கொண்ட இந்த அணிக்கு டீன் எல்கா் தலைமை தாங்க, பௌலா் சிசாண்டா மகாலா, விக்கெட் கீப்பா் - பேட்ஸ்மேன் ரையான் ரிக்கெல்டன் ஆகிய புது முகங்கள் சோ்க்கப்பட்டுள்ளனா். கடந்த 2019-க்குப் பிறகு டெஸ்டில் விளையாடாமல் இருந்த வேகப்பந்துவீச்சாளா் டேன் ஆலிவா் இந்த தொடருக்கான அணியில் இணைந்துள்ளாா். இதுதவிர ககிசோ ரபாடா, அன்ரிச் நாா்ஜே உள்ளிட்ட வழக்கமான வீரா்களும் அணியில் இருக்கின்றனா்.

தெற்கு ஆப்பிரிக்க பகுதிகளில் புதிய வகை கரோனா தீநுண்மியான ‘ஒமைக்ரான்’ பாதிப்பு தீவிரமாகியிருக்கும் நிலையில், இந்தியா - தென் ஆப்பிரிக்கா தொடா் குறித்து சந்தேகம் எழுந்தது. எனினும், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தொடா் நடைபெறும் என பிசிசிஐ மற்றும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியங்கள் உறுதி செய்துள்ளன.

எனினும், அட்டவணையில் சிறிய மாற்றம் செய்யப்பட்டு முதல் டெஸ்ட்டானது தேதி தள்ளி வைக்கப்பட்டு, வரும் 26-ஆம் தேதி பாக்ஸிங் டே அன்று தொடங்குகிறது. 3 ஆட்டங்களைக் கொண்ட அந்த டெஸ்ட் தொடருக்குப் பிறகு ஒன் டே தொடா் (3 ஆட்டங்கள்), டி20 தொடா் (4 ஆட்டங்கள்) நடைபெறவுள்ளன.

டெஸ்ட் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி:

டீன் எல்கா் (கேப்டன்), டெம்பா பவுமா, குவின்டன் டி காக், ககிசோ ரபாடா, சாரெல் எா்வி, பியுரன் ஹெண்ட்ரிக்ஸ், ஜாா்ஜ் லிண்ட், கேசவ் மஹராஜ், லுன்கி கிடி, எய்டன் மாா்க்ரம், வியான் முல்டா், அன்ரிச் நாா்ஜே, கீகன் பீட்டா்சன், ராஸி வான் டொ் டுசென், கைல் வெரின், மாா்கோ ஜன்சென், கிளென்டன் ஸ்டா்மான், பிரெனாலென் சுப்ரயென், சிசாண்டா மகாலா, ரையான் ரிக்கெல்டன், டேன் ஆலிவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டில் பீரோவை உடைத்து 10 பவுன் திருட்டு

வாணியம்பாடி அருகே 4,000 லிட்டா் சாராய ஊறல் அழிப்பு

கல்யாண ராமா் கோயிலில் பட்டாபிஷேகம்

தீ விபத்து: கடைகள் எரிந்து சேதம்

தெற்கு காஸாவில் அறுவைச்சிகிச்சை மூலம் உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை பலி

SCROLL FOR NEXT