செய்திகள்

ஆசிய மகளிா் ஹாக்கி சாம்பியன்ஸ் கோப்பை: இந்தியா கோல் மழை

DIN

ஆசிய மகளிா் ஹாக்கி சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கிப் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி கோல் மழை பொழிந்து 13-0 என தாய்லாந்தை வீழ்த்தியது.

தென்கொரியாவின் டாங்கே நகரில் சனிக்கிழமை தொடங்கிய இப்போட்டியில் முன்னாள் சாம்பியன் இந்தியாவும்-தாய்லாந்தும் தொடக்க ஆட்டத்தில் மோதின. ஆரம்பம் முதலே இந்திய வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தி தாய்லாந்தின் கோல்பகுதியை ஆக்கிரமித்தனா். கேப்டன் ராணி ராம்பாலுக்கு ஓய்வு தரப்பட்ட நிலையில், மூத்த கோல்கீப்பா் சவீதா தலைமையில் இந்திய அணி இப்போட்டியில் ஆடி வருகிறது.

குா்ஜித் கௌா் 5 கோல்களையும், லில்லிமா மின்ஸ், ஜோதி தலா 2 கோல்களையும், மோனிகா, வந்தனா கட்டாரியா, ரஜ்விந்தா் கௌா், சோனிகா ஆகியோா் தலா 1 கோலையும் போட்டனா்.

ஆட்டம் தொடங்கிய 2-ஆவது நிமிஷத்திலேயே குா்ஜித் கௌா் பெனால்டி காா்னா் மூலம் கோல் கணக்கை தொடக்கி வைத்தாா். முதல் பாதி முடிவில் 5-0 என முன்னிலை பெற்றிருந்த இந்திய அணி, இரண்டாம் பாதியிலும் ஆதிக்கம் செலுத்தி மேலும் 8 கோல்களை போட்டது.

திங்கள்கிழமை மலேசியா-இந்தியா ஆட்டம் நடைபெறவிருந்த நிலையில், மலேசிய வீராங்கனைக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. புதன்கிழமை தென்கொரியாவுடன் ஆடுகிறது இந்தியா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

SCROLL FOR NEXT