செய்திகள்

தெ.ஆ. சுற்றுப்பயணம்: இந்திய ஏ அணி அபார பந்துவீச்சு!

1st Dec 2021 11:01 AM

ADVERTISEMENT

 

இந்திய ஏ அணிக்கு எதிரான 2-வது அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் ஆட்டத்தில் முதல் நாள் முடிவில் தென்னாப்பிரிக்க ஏ அணி 7 விக்கெட் இழப்புக்கு 233 ரன்கள் எடுத்துள்ளது. 

குஜராத்தைச் சேர்ந்த பிரியங் பஞ்சால் தலைமையிலான இந்திய ஏ அணி தென்னாப்பிரிக்காவின் ப்ளூம்ஃபோண்டைனில் நடைபெறும் தொடரில் கலந்துகொள்கிறது. மூன்று அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடர் டிசம்பர் 9-ல் நிறைவுபெறுகிறது. இந்த ஆட்டம் சூப்பர் ஸ்போர்ட் யூடியூப் தளத்தில் நேரலையாக ஒளிபரப்பாகி வருகிறது. 

2-வது அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க ஏ அணி, முதல் நாள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 233 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியப் பந்துவீச்சாளர்களில் நவ்தீப் சைனி, இஷான் போரெல் ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்கள். இந்த ஆட்டத்தில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர் பாபா அபரஜித், 1 விக்கெட் எடுத்துள்ளார். 

ADVERTISEMENT

Tags : South Africa India A
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT