செய்திகள்

டோக்கியோ பாராலிம்பிக்ஸ்: வெள்ளிப் பதக்கம் வென்றார் மாரியப்பன்

31st Aug 2021 05:17 PM

ADVERTISEMENT

 

டோக்கியோ பாராலிம்பிக்ஸ் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் மாரியப்பன் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். 

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாரியப்பன், ரியோ பாராலிம்பிக்ஸில் தங்கம் வென்றார். இதையடுத்து டோக்கியோ பாராலிம்பிக்ஸிலும் தங்கம் வெல்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள்.

இன்று நடைபெற்ற உயரம் தாண்டுதல் டி63  போட்டியில் இறுதியாக அமெரிக்க வீரர் சாம் கிரீவ் - மாரியப்பன் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. 1.88 மீ. உயரம் உயரம் தாண்டி அமெரிக்க வீரர் சாம் கிரீவ் தங்கம் வென்றார். இதையடுத்து 1.86 மீ. உயரம் தாண்டிய இந்திய வீரர் மாரியப்பனுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. மற்றொரு இந்திய வீரரான ஷரத் குமார் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

ADVERTISEMENT

Tags : Mariyappan
ADVERTISEMENT
ADVERTISEMENT