செய்திகள்

அடுத்தடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்த இந்தியா: மழையால் ஆட்டம் நிறுத்தம் (விடியோ)

DIN


இங்கிலாந்துடனான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் இரண்டாம் நாள் உணவு இடைவேளைக்குப் பிறகு இந்திய அணி அடுத்தடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தத்தளித்து வருகிறது.

இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் டிரென்ட் பிரிட்ஜில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து 183 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதைத் தொடர்ந்து, முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்தியாவுக்கு ரோஹித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் சிறப்பான தொடக்கத்தை தந்தனர். முதல் விக்கெட்டுக்கு 97 ரன்கள் சேர்த்த நிலையில் ரோஹித் சர்மா (36) ஆட்டமிழந்தார். இந்த விக்கெட்டுடன் உணவு இடைவேளை எடுக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, ராகுலுடன் சேத்தேஷ்வர் புஜாரா இணைந்தார். சிறிது நேரம் மட்டுமே களத்திலிருந்த புஜாரா 4 ரன்களுக்கு ஜேம்ஸ் ஆண்டர்சன் வேகத்தில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் விராட் கோலி முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

அடுத்தடுத்து முக்கிய விக்கெட்டுகள் விழுந்த நிலையில் துணை கேப்டன் அஜின்க்யா ரஹானே இணைந்தார். ஆனால், அவரும் ரன் அவுட் முறையில் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால், இந்திய அணி பெரிய நெருக்கடிக்குள் சிக்கியது.

இந்த நிலையில், போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதன்பிறகு, மழையும் பெய்தது. இந்த இடைவெளியால் 2-ம் நாள் தேநீர் இடைவேளை முன்கூட்டியே எடுக்கப்பட்டுள்ளது. 

2-ம் நாள் தேநீர் இடைவேளையில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்ஸில் இன்னும் 58 ரன்கள் பின்தங்கியுள்ளது. அரைசதம் அடித்த ராகுல் 57 ரன்களுடனும், ரிஷப் பந்த் 7 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் 2 விக்கெட்டுகளையும், ஆலி ராபின்சன் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்துவோம்!

பி.இ.ஓ. பணியிடங்கள்: தற்காலிக பட்டியல் அனுப்பிவைப்பு

பேருந்துகள் நிறுத்தாமல் சென்றால் புகாா் தெரிவிக்க ‘149’

SCROLL FOR NEXT