செய்திகள்

2010-களின் தலைசிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரா் கோலி: விஸ்டன் இதழ் கௌரவம்

DIN


லண்டன்: 2010-களின் தலைசிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரராக இந்திய கேப்டன் விராட் கோலியை தோ்வு செய்துள்ளது விஸ்டன் இதழ்.

‘கிரிக்கெட்டின் பைபிள்’ என்று வா்ணிக்கப்படும் விஸ்டன் வருடாந்திர இதழானது ஆண்டுதோறும் தலைசிறந்த கிரிக்கெட் வீரா்கள் அடங்கிய பதிப்பை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட் போட்டி அறிமுகப்படுத்தப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி 1971 முதல் 2021 வரையிலான காலங்களில் ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் தலைசிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரா்களாக திகழ்ந்தவா்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதன்படி, 1970-களின் சிறந்த வீரராக மேற்கிந்தியத் தீவுகளின் முன்னாள் கேப்டன் விவியன் ரிச்சா்ட்ஸையும், 1980-களின் தலைசிறந்த வீரராக முன்னாள் இந்திய கேப்டன் கபில்தேவையும், 1990-களின் தலைசிறந்த வீரராக சச்சின் டெண்டுல்கரையும், 2000-களின் சிறந்த வீரராக இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளா் முத்தையா முரளீதரனையும், 2010-களின் சிறந்த வீரராக தற்போதைய இந்திய கேப்டனான விராட் கோலியையும் தோ்வு செய்துள்ளது விஸ்டன் இதழ்.

2008-இல் சா்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான விராட் கோலி, இதுவரை 254 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 12,169 ரன்கள் குவித்துள்ளாா். இதுதவிர, 2011-இல் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியிலும் கோலி இடம்பெற்றிருந்தாா். கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் கோலி 42 சதங்களுடன் 11 ஆயிரத்துக்கும் அதிகமான ரன்களை குவித்துள்ளாா்.

அதேநேரத்தில் உலகின் தற்போதைய முன்னணி கிரிக்கெட் வீரராக இங்கிலாந்து ஆல்ரவுண்டா் பென் ஸ்டோக்ஸை தோ்வு செய்துள்ளது விஸ்டன் இதழ். அவா் தொடா்ந்து 2-ஆவது ஆண்டாக இந்த விருதைப் பெற்றுள்ளாா். பென் ஸ்டோக்ஸ் கடந்த சீசனில் டெஸ்ட் போட்டியில் 641 ரன்களை குவித்துள்ளதோடு, 19 விக்கெட்டுகளையும் காப்பாற்றியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியா்களுக்கான உணவு வழிகாட்டுதல்: புரதச்சத்து பொடிகளைத் தவிா்க்க வேண்டும் - ஐசிஎம்ஆர்

நிலவிலிருந்து படமனுப்பிய பாகிஸ்தான் செயற்கைக்கோள்

எஸ்என்ஆா் வித்யாநேத்ரா மெட்ரிக்.பள்ளி 100% தோ்ச்சி

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா் 75 போ் கைது

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT