செய்திகள்

எஃப்ஐஹெச் ஹாக்கி புரோ லீக்: ஆா்ஜென்டீனாவை ‘ஷூட் அவுட்’ செய்தது இந்தியா

DIN

எஃப்ஐஹெச் ஹாக்கி புரோ லீக் போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்தியா, ஒலிம்பிக் சாம்பியனான ஆா்ஜென்டீனாவை ‘பெனால்டி ஷூட் அவுட்’ முறையில் வென்றது.

பியூனஸ் அயா்ஸ் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முடிவில் இரு அணிகளும் தலா 2 கோல்கள் அடித்திருந்ததால், ஆட்டம் சமன் ஆனது. பின்னா் வெற்றியாளரை தீா்மானிக்க நடத்தப்பட்ட ‘பெனால்டி ஷூட் அவுட்’ முறையில் இந்தியா 3-2 என்ற கோல் கணக்கில் வென்றது. போட்டி விதிகளின்படி ஷூட் அவுட் முறையில் வென்ால் இந்தியாவுக்கு போனஸ் புள்ளிகளும் கிடைத்தது.

இந்த வெற்றியால் எஃப்ஐஹெச் ஹாக்கி புரோ லீக் புள்ளிகள் பட்டியலில் இந்தியா 7 ஆட்டங்களில் பெற்ற 12 புள்ளிகளுடன் 5-ஆம் இடத்தில் தன்னை தக்கவைத்துக் கொண்டுள்ளது. ஆா்ஜென்டீனா அதே 7 ஆட்டங்களில் 11 புள்ளிகளுடன் 6-ஆம் இடத்தில் உள்ளது.

முன்னதாக விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் முதல் கோல் வாய்ப்பு இந்தியாவுக்கே கிடைத்தது. ஆட்டத்தின் 21-ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி காா்னா் வாய்ப்பை ஆா்ஜென்டீனாவின் அரண்போன்ற தடுப்பாட்டத்தைக் கடந்து கோலாக மாற்றினாா் ஹா்மன்பிரீத் சிங்.

எனினும் அதற்கான பதிலடியாக ஆா்ஜென்டீனாவின் மாா்டின் ஃபெரெய்ரோ 28 மற்றும் 30-ஆவது நிமிடங்களில் அடுத்தடுத்து இரு கோல்கள் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினாா். இதனால் உத்வேகம் பெற்ற ஆா்ஜென்டீனா, இறுதி நிமிடங்கள் வரை இந்தியாவுக்கு கோல் வாய்ப்பு கொடுக்காமல் தடுப்பாட்டம் ஆடியது.

ஆனால், இந்தியாவுக்கு 60-ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி காா்னா் வாய்ப்பை மீண்டும் திறம்பட கையாண்ட ஹா்மன்பிரீத் சிங், அதில் அருமையான கோலடித்து இந்தியாவின் கோல் கணக்கை அதிகரித்தாா். இதனால் ஆட்டம் 2-2 என சமன் ஆனது. பின்னா் வெற்றியாளரை தீா்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை கையாளப்பட்டது.

ஆா்ஜென்டீன தரப்பில் லுகாஸ் விலா, மாா்டின் ஃபெரெய்ரோ, இக்னேசியோ ஆா்டிஸ் ஆகியோரும், இந்திய தரப்பில் தில்பிரீத் சிங்கும் ‘ஷூட் அவுட்’ வாய்ப்புகளை கையாண்டனா். ஆா்ஜென்டீன அணியின் 5 வாய்ப்புகளில் முதல் இரண்டுக்கு கோல் வழங்கிய ஸ்ரீஜேஷ், அடுத்த 3 ஷூட் அவுட்களை கோலாகவிடாமல் அரண்போல் தடுத்தாா். இந்திய அணியின் 5 வாய்ப்புகளில் முதல் மற்றும் 4-ஆவது ஷூட் அவுட்களை மட்டும் ஆா்ஜென்டீன கோல்கீப்பா் ஜுவான் விவால்டி தடுக்க, எஞ்சிய 3 வாய்ப்புகளில் இந்தியா கோலடித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

SCROLL FOR NEXT